Header Ads



பள்ளிவாசலுக்கு ஆபத்து என்றால் தாமதிக்காதீர்கள் (பாபர் மசூதி கற்றுத்தரும் பாடம்)


1992 டிசம்பர் 4 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகையை முன்னிட்டு டெல்லியிலுள்ள ஜுமுஆ பள்ளியிலிருந்து நாடு முழுவதுமுள்ள பள்ளிவாசல்களுக்கு ஓர் சர்க்குலர் அனுப்பப்பட்டது.

அந்த சர்க்குலரில் டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜிதை இடிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

பாபர் மஸ்ஜிதை பாதுகாக்க ஜுமுஆ தொழுகையில் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அனைவரும் டிசம்பர் 4 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகையில் அல்லாஹ்விடம் கண்ணீரோடு கையேந்தினர்.

டிசம்பர் 5 சனிக்கிழமை பொழுது விடிந்தது. முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஆங்காங்கே கடின மனதுடன் சந்தித்து கொண்டனர்.

மறுநாள் என்ன ஆகுமோ, ஏதாகுமோ என எண்ணி தவித்தனர். இருப்பினும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும், ராணுவம் பள்ளியை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தனர்.

சனிக்கிழமை இரவு எந்த ஒரு முஸ்லிமும் தூங்காமல் இறுகிய இதயத்தோடு இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

சொல்லி வைத்ததுபோல் டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்தது.

மத்திய காங்கிரஸ் அரசு, மாநில பாஜக அரசு, ராணுவம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, ஊடகத்துறை என நாட்டின் அத்துனை துறைகளின் பார்வையில்...

நாடு முழுவதிலிருந்தும் பாஜக பயங்கரவாதிகள் 6 ஆயிரம் பேர் திரண்டு அல்லாஹ்வுடைய ஆலயமான பாபர் மஸ்ஜிதை எட்டி மிதித்தனர். அடித்து உதைத்தனர். இடித்து நொறுக்கினர்.

இறையில்லம் மட்டுமல்ல, 25 கோடி இஸ்லாமியர்களின் இதயங்களும் இடித்து நொறுக்கப்பட்டது.

25 கோடி இஸ்லாமியர்களில் வெறும் 25 ஆயிரம் முஸ்லிம்கள் அன்றைய தினம் அயோத்தியில் திரண்டிருந்தால் 25 ஆயிரம் முஸ்லிம்களும் உயிரை கொடுத்து பாபர் மஸ்ஜிதை மீட்டிருப்பார்கள்.

1 comment:

  1. this article is fooling people .dua is powerful than anything. allah definitely answer. don't mislead.

    ReplyDelete

Powered by Blogger.