Header Ads



“முகாபேக்கு நடந்ததுதான், ராஜபக்சவுக்கும் நடந்திருக்கும்”

“ஜனவரி எட்டு புரட்சிக்குக் கைகொடுத்த அனைவருக்கும் மகிந்த ராஜபக்ச நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்த மாற்றம் இந்நாட்டில் ஏற்பட்டிருக்காவிட்டால், இன்று முகாபேக்கு நடந்ததுதான் ராஜபக்சவுக்கும் நடந்திருக்கும்” என்று இடதுசாரி நிலையத்தின் உப தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று -22- கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மகிந்த ராஜபக்சவின் குடும்ப சர்வாதிகார ஆட்சி தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதற்கு ரொபர்ட் முகாபே ஒரு வாழும் சாட்சி! எனினும், ஜனநாயக சக்திகள் ஓரணியில் ஒன்றிணைந்ததால், ஜனவரி எட்டாம் திகதியுடன் மகிந்தவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதற்காக மகிந்த நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறார்.

“பிணைமுறி விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் ஆஜராகி சாட்சியமளிக்கும் அளவுக்கு இவ்விவகாரம் அழுத்தம் பெற்றுள்ளது.

“ஆனால் இதுவே மகிந்தவின் ஆட்சியாக இருந்திருந்தால் அவரால் ஊழல்களை இவ்வாறு இரும்புக் கரம் கொண்டு தடுத்திருக்க முடியாது. பிணைமுறி விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் இலங்கை அரசியலில் புதிய கலாச்சாரத்தையே அறிமுகப்படுத்தியிருக்கிறது” என்று சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.