Header Ads



யார் இந்த அமீன்..?

-கலை­வாதி கலீல்-

கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழு­தி­யுள்ள ‘அமீன் அருங்­கா­வியம்’ கவிதை நூல் வெளி­யீட்டு விழா நாளை சனிக்­கி­ழமை காலை 9 மணிக்கு கொழும்பு 07, ஆனந்த குமா­ர­சு­வாமி மாவத்தை, புதிய நகர மண்­டப கேட்பார் கூடத்தில் நடை­பெறும்.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்­னணி மற்றும் அஸீஸ் மன்றம் இணைந்து நடத்தும் இந் நிகழ்வின் பிர­தம அதி­தி­யாக இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தலை­வரும் இந்­திய லோக் சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான முனிருல் மில்லத் பேரா­சி­ரியர் கே.எம்.காதர் மொகிதீன் பிர­தம அதி­தி­யாக கலந்து கொள்வார். 
காவி­யா­பி­மானி கலை­வாதி கலீல் தலை­மையில் நடை­பெறும் இந்­நி­கழ்வில் நூலின் முதற்­பி­ர­தியை புர­வலர் ஹாசீம் உமர் பெற்­று­கொள்­ள­வுள்­ள­தோடு நூல் ஆய்­வினை காப்­பி­யக்கோ டாக்டர். ஜின்னா சரீப்தீன் நிகழ்த்தவுள்ளார். இந் நிகழ்வை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

 அமீன் அருங்­கா­வியம் என்ற நூல், சனி­யன்று கொழும்பு 7 புதிய நகர மண்­ட­பத்தில் வெளி­யி­டப்­ப­டு­கி­றது. இந்­நூலை ஆக்­கி­யி­ருப்­பவர் புலவர் பரம்­ப­ரையில் தோன்­றிய இளங்­க­வி­ஞ­ரான மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் ஆவார்.

அனஸ் ஏற்­க­னவே பல காப்­பி­யங்கள் இயற்­றி­யி­ருக்­கிறார். ஊர் துறந்த காவி­யம், நாய­கக்­கா­வியம், அஷ்ரப் அமர காவியம், வாப்பு மரைக்கார் வழிக்­கா­வியம், தங்­கத்­துரை காவியம், மஜீது காவியம் ஆகி­யன இவர் எழு­திய காவி­யங்­க­ளாகும். எல்­லா­மாக இவர் 22 நூல்­களை இதுவரை வெளி­யிட்­டுள்ளார். சாத­னைதான்! புகழ்­பெற்ற அர­சி­யல்­வா­தி­க­ளான அஷ்ரப், தங்­கத்­துரை, மஜீது ஆகி­யோ­ருக்குப் பின் அர­சி­ய­லுக்கு அப்பால் சென்று சமூ­கத்­தொண்­டர்கள், சமு­தாயச் சிற்­பிகள், சமூக நலன் விரும்­பி­க­ளைப் ­பற்­றிய காவிய வடி­வி­லான நூல்­களின் வெள்­ளோட்­ட­மா­கவே அமீன் அருங்­கா­வியம் வெளி­யி­டப்­ப­டு­கி­றது. 

யார் இந்த அமீன்?

இந்த ஈழமணித்­ தி­ரு­நாட்­டிலே பல அமீன்கள் இருக்­கின்­றார்கள். நீதி­ய­ர­சர்கள், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் கூட அமீன் என்ற அழ­கொளிர் நாமத்­திலே இருந்­தார்கள், இருக்­கி­றார்கள். ஆயினும் பொது இடங்­களில் அமீன் என்ற நாமம் உச்­ச­ரிக்­கப்­படும் போதெல்லாம் யாரவர். என்.எம். அமீனா? என்­றுதான் கேட்­பார்கள், இதை நான் நன்­க­றிவேன். அந்த அள­வுக்கு இந்த நாட்டில் என்.எம்.அமீனின் பெயர் துலங்­கு­வ­தற்கும் துலாம்­ப­ர­மா­வ­தற்கும் கார­ணங்கள் நிறை­யவே இருக்­கின்­றன. 

முத­லா­வ­தாக என். எம். அமீன், இந்த நாட்­டிலே வாழ்­கின்ற மூத்த ஊட­க­வி­ய­லாளர் என்­ப­தைக்­க­ருத்தில் கொள்ள வேண்டும். அவர் கற்­றது, பல்­க­லைக்­க­ழ­கத்தில் விரும்­பிப்­ப­யின்­றது, தொழிலாய் ஏற்­றுக்­கொண்­டது. இற்­றை­வரை அழுத்­தமாய் பற்­றிப்­பி­டித்­துக்­கொண்­டது ஊட­கத்­து­றை­யைத்­தான். 

பணம் புழங்கும் பல்­வேறு தொழில்கள் இருந்தும் கூட ஊட­கத்­து­றை­யையே தனது இலட்­சி­ய­மாக வரித்­துக்­கொண்டார். அவ­ரது எண்ணம், எழுத்து, ஏக்கம், இலட்­சியம் , சொல், செயல் அனைத்தும் ஊட­க­மா­கவே இருக்­கின்­றது. அந்த வகையில் அமீன் ஓர் ஊட­கத்­துறை ஜாம்­ப­வா­னாக ஊட­கத்­து­றையின் சாத­னை­யா­ள­ரா­கத்­தி­கழ்ந்து வரு­கின்றார். பல்­க­லைக்­க­ழகப் பரீட்சை முடி­வுகள் வெளி­யாகும் முன்­னரே லேக்­ஹ­வுஸில் இணைந்து ஓய்வு பெறும் வரை லேக்­ஹ­வு­ஸி­லேயே பணி­யாற்றி படிப்­ப­டி­யாக உயர்ந்து முகா­மைத்­துவ ஆசி­ரி­ய­ரா­கப்­ப­ணி­யாற்றி ஓய்­வு­பெற்ற பின்­னரும் கூட மற்­றொரு நாளே­டான நவ­ம­ணியின் பிர­தம ஆசி­ரி­ய­ராகப் பொறுப்­பேற்­றி­ருக்­கிறார். இது எதைக்­காட்­டு­கி­ற­தென்றால் வரு­மா­னத்தை குறிக்கோளா­கக் ­கொள்­ளாமல் ஊட­கத்­து­றைக்­காக தனது உடல், பொருள், உழைப்பு இம்­மூன்­றையும் இழக்­கத்­தயார் இந்த அமீன் என்­ப­தையே இது நிரூ­பித்­தி­ருக்­கி­றது.  

உண்­மையில் ஊட­கப்­பங்­க­ளிப்பை ஒரு வேள்­வி­யா­கவே நடாத்­தி­வ­ரு­கிறார் அமீன் எனில் அது மிகைப்­பட்ட கூற்­றல்ல. பெரும் பத­விகள் தேடி­வந்த போதும் கூட அவற்­றை­யெல்லாம் உதறித்­தள்ளிவிட்டு ஊட­கமே என் உயிர்­நாடி என்று வாழ்ந்து வரு­வதை நான் நன்­க­றிவேன். எனவே அமீ­னுக்­காக  ஒரு காவிய நூலை கவிஞர் அனஸ் யாத்­த­ளிப்­பது மிகப்­பொ­ருத்­த­மா­னதே. 

 அடுத்­த­தாக என்.எம். அமீனின் சமூ­கப்­பணி அது சொல்­லுந்­த­ர­மன்று! இந்­நாட்டு மக்­க­ளுக்­காக விசே­ட­மாக முஸ்லிம் மக்­களின் நலன்  கரு­தியே அல்லும் பகலும் பாடு­பட்டு வரு­கிறார். பார­தூ­ர­மான பிரச்­சி­னைகள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் இவ­ரது தலை­யீடு அப­ரி­மி­த­மா­னது. அத்­தோடு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் நலன் சார்ந்த நட­வ­டிக்­கை­க­ளிலும் முனைப்­புடன் ஈடு­பட்டு வரு­கிறார். அதற்­குப்­பக்­க­ப­ல­மாக அமீனின் தலை­மையில் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் நவ­மணி போன்ற பத்­தி­ரி­கை­க­ளையும் வானொலி தொலைக்­காட்சி போன்ற இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளையும் பயன்­ப­டுத்தி வரு­கின்றார். 

சுறு­சு­றுப்­புடன் அங்­கு­மிங்கும் ஓடி­யாடி பல இடங்­க­ளுக்கும் பயணம்  செய்து ஏன் வெளி­நா­டு­க­ளுக்கும் கூடச் சென்று முக்­கிய பிர­மு­கர்­க­ளையும் அர­சியல் தலை­வர்­க­ளையும் கல்­வி­மான்­க­ளையும் சந்­தித்துக் கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னை­க­ளுக்­குத்­ தீர்வுகாணும் நட­வ­டிக்­கை­களில் முனைப்­புடன் ஈடு­பட்டு வரு­கிறார். பெரும்­பா­லான  பிரிச்­சி­னை­களில் வெற்­றியும் கண்­டுள்ளார். எனவே  இந்த அமீன் அருங்­கா­வியம் என்ற நூல் எழு­தப்­ப­டத்தான் வேண்டும். அதனை கன­கச்­சி­த­மாகச் செய்­தி­ருக்­கிறார். மூதூர் எம்.எம்.ஏ. அனஸ். 

நீண்ட நெடு நாட்­க­ளா­கவே அமீனின் நெஞ்­சத்தில் ஒரு மகத்­தான எண்­ணக்­கரு இழை­யோ­டிக்­கொண்­டி­ருந்­தது. அது ஒரு வெறி­யென்று கூறி­னால்­ கூ­டத்­தப்­பில்லை. ஆம்! முஸ்­லிம்கள் கையில் ஒரு தமிழ் தின­சரி வேண்­டு­மென்­பதே அவ்­வெண்­ணக்­கரு. அந்த வேணவா வீண் போக­வில்லை. இன்று அது நிறை­வே­றி­யி­ருக்­கி­றது. இவை­யெல்லாம் அமீனின் நேர்­மை­யான ஓயாத முயற்­சிக்கு போராட்­டத்­திற்குக் கிடைத்த வெற்­றி­க­ளாகும்.  

அனஸ் எழு­திய ‘அமீன் அருங்­கா­வியம்” என்ற இந்த நூல் 107 பக்­கங்­களில் அழ­கிய முகப்­போ­வி­யத்­துடன் மிளிர்­கின்­றது. முன்னாள் ஆளுநர், முன்னாள் சபா­நா­யகர் மர்ஹூம் பாக்கிர் மாக்­கா­ருக்கு நூல் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. காப்­பி­யக்கோ ஜின்னாஹ் ஷரி­பு­தீனின் வாழ்த்­துப்­பாவும் முது­க­விஞர்; தாமரைத் தீவான், கவிஞர் கிண்­ணியா ஏ.எம்.எம் அலி, கவிஞர் மூதூர் எம்.ஏ பரீது, காவ்­யா­பி­மானி கலை­வாதி கலீல் ஆகி­யோரின் வாழ்த்­துப்­பாக்­களும் மல­ருக்கு அணி­சேர்க்­கின்­றன.

இறைஞ்சல், காப்பு, அவை­ய­டக்கம், நாடு­நகர் வாழ்த்து, காவியம் என 160 பாடல்­களும் அமீ­ன­ருங்­குறள் என்ற தலைப்­பில் 28 குறள்­களும் என்.எம். அமீன் வாழ்த்­துப்பா என்ற மகு­டத்தில் 15 பாடல்­களும் அமீ­னரும் வெண்பா என்ற தலைப்பில் 30 வெண்­பாக்­களும் இந்­நூலில் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வெண்­பாக்கள் ஒவ்­வொன்­றிலும் அமீன் என்ற சொல் இடம்­பெற்­றுள்­ளமை சிலா­கிக்­கத்­தக்­கது.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகத் தமிழ்த்­துறைத் தலைவர் பேரா­சிரியர் ரமீஸ் அப்­துல்லாஹ், அணிந்­து­ரை­யொன்றை வழங்­கி­யுள்ளார். ஓரி­டத்தில் அவர் இவ்­வாறு குறிப்­பி­டு­கின்றார். ‘இலங்கை முஸ்­லிம்­களின் தேசிய விட­யங்­களைக் கையாள்­வ­திலே அமீன் இன்று முக்­கிய பங்­கு­வ­கிக்­கின்றார். அர­சி­யல்­வா­தி­களை விட மக்கள் சக்­தி­யினை ஒன்­றி­ணைப்­பதில் அவ­ருக்கு அதிக பங்­கி­ருக்­கின்­றது. மக்கள் இயக்­கத்தைக் கூட்­டி­ணைப்­ப­வ­ராக நம் எல்­லோ­ருக்கும் நம்­பிக்கை தரும் சக்­தி­யாக “அமீன் நானா” திகழ்­கிறார். எல்­லோ­ருக்கும் அவர் மீதுள்ள உரிமை கார­ண­மா­கவே பெரும்­பாலும்  அவர் எல்­லோ­ராலும் “அமீன்­நாநா” என்று அழைக்­கப்­ப­டு­கிறார். அந்த உரி­மையின் கார­ண­மா­கவே அனஸ் இன்று அவரை காவிய நாய­க­னாக்கியிருக்­கிறார். என்.எம்.அமீன் பணிகள் என்றும் தொட­ர­வேண்டும்.

தல்­கஸ்­பிட்டி என்ற குக்­கி­ரா­மத்தில் பிறந்த அமீன்  பல கிலோ மீற்றர் கால்­ந­டை­யாக நடந்து பஸ்­ஸேறிச் சென்று கல்­வி­கற்ற ஊரின் முத­லா­வது பட்­ட­தாரி. இவ­ரது குடும்பம் பேரும் புகழும் மிக்க வைத்­தி­யக்­கு­டும்­ப­மாக இருப்­பினும் மிகவும் பின்­தங்­கிய கிராமம் என்­பதால், பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளையும் இழந்து நின்­றது. மாணவப் பரு­வத்­தி­லேயே ‘தாஜ்­மஹால் என்ற நலன்­புரி அமைப்­பொன்றை உரு­வாக்கி ஊரினை உயர்ச்­சி­யாக்க பாடு­பட்டார். அந்த தலை­மைத்­துவ ஆளுமை முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி, பாமிஸ் போன்ற அமைப்­பு­களில் இணைந்து பொறுப்பு வாய்ந்த பத­வி­களை வகித்தார். 

தலைவர், உப­த­லைவர், செய­லா­ள­ராக தனது மகத்­தான பங்­க­ளிப்பை நல்கி வந்தார். நாட்டில் சக்­தி­மிக்க அமைப்­புக்­க­ளான ஸ்ரீலங்கா முஸ்லிம்  கவுன்சில்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகி­ய­வற்றின்  தலை­வ­ராக நீண்ட காலம் பணி­யாற்ற முடிந்­தமை அமீ­னது ஆளு­மை­க­ளையும் அவர் மீதுள்ள நம்­பிக்­கை­யையும் கோடிட்டு காட்­டு­கி­றது. மீடியா போரத்தின் தலை­வ­ராக கடந்த இரு தசாப்தங்­க­ளாக பணி­யாற்றி வரு­கின்­ற­மையும் SAFMA எனப்­படும் தென்­கி­ழக்­கா­சியா ஊடக அமைப்பின் இலங்கைப் பிர­தி­நி­தி­யாக அமீன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­ கின்­ற­மையும் இவர் மீது ஊடக சமூகம் கொண்­டுள்ள நம்­பிக்­கையின் உச்சம் எனலாம்.

பட்­டங்கள் ,பொன்­னாடை, புகழ் மாலை­களில் நாட்டம் இல்­லா­தவர் அமீன். ஆயினும் பல­ பட்­டங்­களின் சொந்­தக்­கா­ரர். ஆனால், அவற்றில் ஒன்­றைக்­கூட அவரின் பெயரின் முன்னால் பொறித்­துக்­கொண்­டது இல்லை. முஸ்லிம் பண்­பாட்டு அலு­வல்கள் அமைச்சு வழங்­கிய ‘சௌத்துல் உம்மா’, அரசு வழங்­கிய ‘தேச­மான்ய”, கொழும்பு தமிழ்­சங்கம், தெஹி­வளை கல்­கிஸ்ஸை மாந­கர சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்­னணி ஆகி­யவை வழங்­கிய மதிப்புமிக்க பட்­டங்­களைத் தன் பெயரின் முன் அடை­மொ­ழி­யாக்கிக் கொள்­ளாமல் வெறும் என்.எம்.அமீ­னாக நிற்­ப­வர்தான் அமீன். அந்த என்.எம்.அமீன் ஒன்றே அவ­ரது நாமத்தை உல­க­மெங்கும் துலங்கச் செய்­தது.

நல்­ல­தொரு குடும்பம் பல்­க­லைக்­கழகம் என்பர். அமீனின் குடும்பம் ஒரு பல்­க­லைக்­க­ழகம் தான். நிசா­முத்தீன் உடையார் மரியம் பீபி தம்பதியினரின் புத்திரரான அமீனுடைய மனைவி நஸ்லிமா ஓர் ஆசிரியை. டீ.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியில் தமிழ் பிரிவின் தலைவியாக கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார். பிள்ளைகளில் ஒருவர்; பீ.பீ.சி செய்தி சேவையின் இலங்கைக்கான நிருபராக கடமை புரிகிறார். மகள் லண்டனில் வசித்து வருகிறார். இளைய மகன் பல்கலைக்கழகத்தில் மாணவராகவுள்ளார். அமீனுடைய சகோதரர்கள் சிலர் ஆசிரியராக கடமை புரிகின்றார்கள். இவ்வாறு சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருவது அமீனுக்கு இறைவன் கொடுத்த அருள் என்றே கருதவேண்டியுள்ளது. இத்தகைய தகவல்களை உள்ளடக்கிய நூல்தான் நாளை வெளியிடப்படும் அமீன் அருங்காவியம்.

நாட்டின் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், இந்தியப் பேரறிஞர்கள், இந்தியன் யூனியன் முஸ்லீக் அமைப்புகளின் தலைவர், மாநிலத்தலைவர், இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கின்றார்கள். விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

2 comments:

  1. வாழ்த்துக்கள் "அமீன் நானா".
    எனக்கும் நீங்கள் ஓர் ஆசான்.

    ReplyDelete
  2. எனது ஊடகத்துறை முன்னேற்றங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்!

    ReplyDelete

Powered by Blogger.