Header Ads



ஜும்ஆ பள்ளிவாசலில், இலவச மருத்துவ முகாம் - பௌத்தபிக்கு புகழாரம்


கொழும்பு  கிருலப்பனை  ஜம்ஆப் பள்ளிவாசலில்  கிருலப்பனை  பொலிஸ்- இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றை இன்று 5ஆம் திகதி) காலை 08- பி.பகல் 04.30 மணிவரை -  நாடத்தியது.  இதில் இப்பிரதேசத்தில் வாழ் மூவினங்களையும் சாா்ந்த  மக்கள் கலந்து   கொண்டனா். தேசிய வைத்தியசாலையில் உள்ள 25க்கும் மேற்பட்ட முஸ்லீம் சிங்கள தமிழ் டொக்டா்கள்  இணைந்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து அவா்களுக்கு இலவச  மருந்துகளும் வழங்கப்பட்டன.  இந் வைத்தியமுகாமுக்கு  ரிச்சாட் பீரிஸ் நிதி க் கம்பணியின்  நிறைவேற்றுப் பணிப்பாளா்  கே.எம். எம். ஜபீா் அனுசரனை வழங்கினாா்.

இந் நிகழ்வில்  கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,  பள்ளிவாசல் நிர்வாகத்தினா்,  இராஜாங்க அமைச்சா்  ஏ.எச்.எம் பௌசி, அமில தேரோ  ஹிந்து.  கிரிஸ்த்துவ மதத் தலைவா்களும் கலந்து  கொண்டு இப் நல்ல பணியை ஆசிர் வதித்தனா். 

 பள்ளிவாசால்  ஒரு சமுகத்திற்கு மதச சடங்கு மட்டுமன்றி  அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து  தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வு ஒற்றுமை வளா்ந்துள்ளது என தேரா் உரையாற்றினாா்.  

கிருலப்பணையில் பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கிடையே எவ்வித மத வேறுபாடுகள்,  இனரீதியான செயற்பாடுகள் இதுவரை நடைபெற்வில்லை  இங்கு வாழ் சகல சமுகங்களும் அன்னியோண்னியமாகவும்  புரிந்துணா்வுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனா்  என பொலிஸ் பொறுப்பதிகாரி  உபுல் ரணசிங்க கருத்து தெரிவித்தாா். 

(அஷ்ரப் ஏ சமத்)



5 comments:

  1. அல்லாஹு அவனது கடைசி தூதர் முகம்மது ஸல் அவர்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் நல்லவிடயங்களில் உதவி செய்ய முஸ்லிம்களாகிய நமக்கு கட்டளை இட்டுள்ளான்,ஆனால் ஒரு இறைவனை மட்டும்தான் வணங்கும்படியும் அவனுக்கு மட்டும்தான் சிரம்பனியுமாறும் உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் படைப்பினங்களையும் எச்சரித்துள்ளான்.

    ReplyDelete
  2. இஸ்லாதில் இரண்டாம் நீதியான கலீபாவான உமர் ( ரழி) அவர்களின் காலத்தில ஒரு வயது முதிர்ந்த யூதர் யாகசம் கேட்டுக்கொண்டு இருந்த்தை கண்ட அவர் முதியவரை அழைத்து சென்று அவருக்கு தேவையான அளவு அவருக்கு வேண்டியதை ( பைத்துல்மாலிருந்து) அள்ளிக்கொடுத்தார்கள் பைத்துல்மால் என்பது நன்கொடை ஸகாத் பொருட்களை களஞ்சியப்படுத்தமிடம்

    ReplyDelete
  3. மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்குள் வருவதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

    பள்ளிக்குள்தான் மருத்துவ முகாம் நடாத்த வேண்டுமா?

    ""கிருலப்பணையில் இது வரை மத வேறுபாடுகள், இன முறிவுகள் நடைபெறவில்லை."" (செய்தி)

    இதற்குப் பிறகுதான் ஏதாவதொன்றை நடாத்தத் திட்டமிடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

    ReplyDelete
  4. How do you know it is inside of prayer area? If you are not sure please go and check before commenting unknown things.

    ReplyDelete

Powered by Blogger.