Header Ads



லெபனானை தாக்க, இஸ்ரேலுக்கு பணம்வழங்க சவுதி தயார் - ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாத் ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக செளதி அவரை வைத்துள்ளதாக ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார்.

லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை செளதி தூண்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா அமைப்பு இரானுடன் கூட்டாளியாக உள்ளது.

ரியாத்தில் இருந்து ஒளிபரப்பான தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

இந்நிலையில்,சாத் ஹரிரி நாடு திரும்ப வேண்டும் என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாத் ஹரிரி செளதியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், செளதி விடுக்கும் உத்தரவைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

லெபனான் அதிபர் மைக்கேல் அவுன், சாத் ஹரிரியின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை.

''லெபனானுக்கு எதிராகவும், ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் செளதியும், செளதி அதிகாரிகளும் போரை அறிவித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது'' என ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார்.

லெபனானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கிலான பணத்தை கொடுக்க செளதி தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. நஸ்ரு ஷைத்தான் இஸ்ரேல் நாணயத்தின் மறுமுகம் என்ற படியாலோ உடனுக்குடன் இஸ்ரேல் செய்திகள் அவனுக்கு தெரிய வருகிறது????

    ஈரான் நாட்டு யூதர்கள் வசிக்கும் “அஸ்பஹான்” நகரைப் போய்பாருங்கள் ஸூன்னிகளுக்கு இல்லாத முழு சுதந்திரம் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
    ஷீயாக்கள் யூதர்களின் அடிவருடிகள் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அல்லாஹ்வின் முந்நிலையில் இறைவனை ஈமான் கொண்டவனுக்கும்(அவன் மக்கள் விடயத்தில் எத்தகையவனாக இருந்தாலும்) காபிருக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

      Delete
    2. Munawar , r u Shia?

      Delete
  2. It's possible. Suad family dogs will do whatever it takes to safeguard their family rules

    ReplyDelete

Powered by Blogger.