Header Ads



முஸ்லிம்களின் பகுதிக்கு, பாதுகாப்பாக செல்ல வேண்டும், முஜீபுர் ரஹ்மானுக்கு சாப்பாடு தயார் - ஞானசாரர்

கிந்தோட்டை சம்வங்கள் போல இன்னும் பல சம்வங்கள் நாட்டில் இடம்பெறலாமென பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டின் சகல பிரதேசங்களிலும் சுதந்திரமாக வாகனத்தை செலுத்திச் செல்லலாம் என் நிலைமை இருக்கையில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் மாத்திரம் அதி அவதான வளையத்திற்கு செல்வது போல் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

பள்ளிவாசல்களின் முன்னாள் அமைதியாக செல்ல வேண்டும் என்றும், வாகனங்கள் தரிக்க தடை என்றும் அறிவுருத்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இன்று அக்கரனை, கம்பஹா வரிசையில் புதிதாக கிந்தொட்டையும் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நாட்டில் முஸ்லீம் அடிப்படைவாதம் உள்ளது என்பதே எமது நிலைப்பாடாகும். ஆனாலும் இந்த நாட்டில் இனிவரும் நாட்களில் கிந்தொட்டை போன்ற பல சம்வபங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.  தற்போது நாங்கள் அமைதியாக இருப்பதால் அரசாங்கம் எங்களை அமர்த்திவிட்டது என்று கருதக்கூடாது.

நாங்கள் உரிய தருணத்தில் முன்னிலையாவோம். தொடர்ச்சியாக எமது அமைதி நீடிக்காது. காரணம் சிலர் சிறு பிரச்சினைகளையும் பூதாகரமாக்க முயற்சிக்கின்றனர். முஜீபூர் ரஹ்மான் உள்ளிட்டோருக்கும் விரைவில் சாப்பாடு தயார் செய்து வைத்துள்ளோம். இவ்வாறிருக்கையில் தற்போது அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. நாட்டில் இடம்பெறும் சம்வங்களை பார்க்கையில் சிங்களவர்கள் வாயை மூடிக்கொண்டு அடிவாங்குவதான் நல்லிணக்கமா என்று கேட்கத்தோன்றுகின்றது.

எனவே அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு ஒரு குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.“ எனக் குறிப்பிட்டார்.

5 comments:

  1. நல்லதைய நல்லது துள்ளுகிற மாடு ஒரு நாள் பொதி சுமக்குமைய.

    ReplyDelete
  2. இவனுக்கும் முஸ்லீம் அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது என்று சொன்னாங்க என்னத்த பேசினாங்க. இவ்வண்ட கதையை பார்த்தால் நாய் வால நிமித்த இயலாது போல இருக்கே

    ReplyDelete
  3. He is becoming a professional liar of the Sri Lankan Media, so do the current world media......Doesn't this indicate us something is cooking against us... so..what are preventive measures do we have??????

    ReplyDelete
  4. எங்கே இவருடன் பேசிய அதி புத்திசாலி முஸ்லிம்கள் சத்தத்தையே காணோம்
    இந்த தேரருக்கு தெரியவில்லையா சாராயம் குடித்துக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாதென்று அத்துடன் பாதசாரிகளை உரசிக்கொண்டும் மோதிக்கொண்டும் ஓட்டக்கூடாதென்று ??

    ReplyDelete

Powered by Blogger.