Header Ads



கொழும்புக்கு வந்த அமெரிக்க விமானந்தாங்கி, தாக்குதல் அணி புறப்பட்டுச் சென்றது

நான்கு நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக் கடற்படையின், நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி, நேற்று புறப்பட்டுச் சென்றது.

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பல் தலைமையில், அதிவேகப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிரின்சிரோன், நாசகாரிக் கப்பல்களான,  யுஎஸ்எஸ் ஹவார்ட், யுஎஸ்எஸ் சூப், யுஎஸ்எஸ் பின்க்னி, யுஎஸ்எஸ் கிட் ஆகியன கடந்த 28ஆம் நாள், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருந்தன.

கொழும்பில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்திருந்த போது, அமெரிக்க கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இந்தப் போர்க்கப்பல்களின் அணி, சிறிலங்கா கடற்படையினரின் பாரம்பரிய, வழியனுப்பு நிகழ்வுகளுக்குப் பின்னர், கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றது.

முன்னதாக, 11 ஆவது விமானந்தாங்கி  தாக்குதல் அணியின் தளபதியான றியர் அட்மிரல் கிரெகரி ஹரிஸ், நேற்றுமுன்தினம் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.