Header Ads



தீவிரவாதியுடன் இணைந்து செயற்பட, பொதுபல சேனா இணக்கம் - இன்று இறுதிப் பேச்சு


-ARA.Fareel-

இலங்­கை­யி­லி­ருந்து மியன்­மா­ருக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு அங்கு சென்­ற­டைந்­துள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அசின் விராது தேரர்  தலை­மை­யி­லான பௌத்த அமைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி ரோஹிங் யாவில் முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்­கு­மி­டையில் நிலவும் முரண்­பா­டு­களின் உண்­மை­யான கள நிலைமை பற்றி ஆராய்ந்­தனர்.

மேலும் ரோஹிங்­யாவில் பௌத்­தர்­களின் உரி­மை­களைப் பாது­காத்துக் கொண்டு மேலும் பல­மான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­யின்­போது கருத்­துகள் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­டன என பொது­ப­ல­சேனா வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கும் மியன்­மா­ருக்கும் இடையில் நீண்ட கால­மாக நிலவும் பௌத்த தேர­வாத உற­வினை தற்­கால சூழ்­நி­லையில் மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் பொது­ப­ல­சேனா அமைப்பும் மியன்மார் பௌத்த அமைப்பும் மிகவும் நெருக்­க­மாக இணைந்து செயற்­ப­டு­வ­தா­கவும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக மியன்­மாரில் பல­கட்ட பேச்சுவார்த்­தைகள் இடம்­பெற்­றன.

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான குழு­வினர் கடந்த 8 ஆம் திகதி மியன்­மாரைச் சென்­ற­டைந்­தனர். மியன்மார் பௌத்த அமைப்பின் தலைவர் அசின் விராது தேர­ருக்கும் பொது­ப­ல­சே­னா­வுக்கும் இடையிலான பலகட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றன. பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


6 comments:

  1. Well done, you may have to conduct precautious defence to protect the srilankan unity from the islamic terrorism.
    Burma has been still fighting against the terrorism, and we everybody has the obligation to support burma budhist ppl this time.
    Have a good meeting for the good results in Srilanka

    ReplyDelete
  2. Now they will defeat Sri Lanka's so called new constitution and useless NE merger.

    ReplyDelete
    Replies
    1. First of all they hv to defeat islamic terrorism

      Delete
  3. LTTE is still in the terrorist lists.

    ReplyDelete
  4. Anusath another Burmish butcher

    ReplyDelete
  5. துவேசத்த வெளிப்படையாக காட்டுறவன் சிங்களவன் ஆனா துவேசத்த மனசுக்குள்ள வெச்சிக்கி பழகுறவன் தமிழன்.
    சிங்களவன் தமிழ்,முஸ்லீம்களை எதிரியாப்பாக்கான் ஆனா தமிழன் முஸ்லீம்களை எதிரியாப்பாக்கான். நீங்க என்னதான் செஞ்சாலும் அழிவு ஒங்களுக்குத்தான் என்பதை மறந்துவிடாதீங்க.

    ReplyDelete

Powered by Blogger.