Header Ads



தொழுகை செய்வது போன்று, கோவிலில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி - யோகி ஆதித்யநாத் விமர்சனம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். ராகுல் காந்தி கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிவதுமாக தீவிரமாக செயல் படுகிறார். 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநில பா.ஜனதா முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராகுல் காந்திக்கு கோவிலில் எப்படி இருக்க வேண்டும் என்பது கூட தெரியாது என விமர்சனம் செய்து உள்ளார். 

செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட யோகி ஆதித்யநாத் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். 

 “வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற போது ராகுல் காந்திக்கு எப்படி அமர்வது என்பது கூட தெரியவில்லை. கோவிலில் தொழுகை செய்வது போன்று அமர்ந்து இருந்தார். கோவில் பூசாரி இது கோவில் என்றும் மசூதி இல்லை என்றும் ராகுல் காந்தியிடம் தெரிவித்து இருக்க வேண்டும்,” என பேசிஉள்ளார் யோகி ஆதித்யநாத். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்  ராமரும், கிருஷ்ணரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என தெரிவிக்கப்பட்டது என கூறிய யோகி ஆதித்யநாத், 

“அவர்கள் கற்பனையான காதபாத்திரங்கள் என்றால் கோவில்களில் ராகுல் காந்திக்கு என்ன வேலை? அவர் கோவிலுக்கு செல்லும் போது எல்லாம் வேடிக்கையாகவும் உள்ளது, வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது.” என கூறிஉள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக போகிறார் என்பதை கேலி செய்த யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதற்கு வழிவகைசெய்யும் என கூறிஉள்ளார். 

No comments

Powered by Blogger.