Header Ads



நேற்று அளுத்கம, இன்று கிந்தோட்டை, நாளை...?


இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மற்­று­மொரு கறுப்பு அத்­தி­யாயம் கடந்த வாரம் எழு­தப்­பட்­டு­விட்­டது. காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வன்­மு­றைகள் தென்­னி­லங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றிலும் கறை­ப­டிந்த ஒன்­றா­கவே அமைந்­து­விட்­டன.

காலா­கா­ல­மாக ஒரு­வ­ரோ­டொ­ருவர் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வரும் காலி மாவட்ட சிங்­கள- முஸ்லிம் மக்கள் மத்­தியில் மிக மோச­மா­ன­தொரு கறை­யையே இந்தச் சம்­ப­வங்கள் தோற்­று­வித்­துள்­ளன. சாதா­ர­ண­மாக இடம்­பெற்ற ஒரு விபத்தை பெரும் இன முறு­க­லாக மாற்றி பாரிய இழப்­புக்­க­ளுக்கு வித்­திட்­டமை எந்­த­வி­தத்­திலும் ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். 

உண்­மையில் இந்த அசம்­பா­வி­தங்கள் தடுத்து நிறுத்­தப்­பட்­டி­ருக்கக் கூடி­ய­வை­யாகும். பொலி­சாரும் பிர­தேச அர­சியல் , சிவில் மற்றும் மதத் தலை­வர்­களும் இது­வி­ட­யத்தில் கோட்டை விட்­டுள்­ளனர். 

''நாங்களும் தவ­றி­ழைத்­து­விட்டோம்'' எனக் கூறி­விட்டு பொலிஸ் மா அதிபர் நழு­வி­வி­ட­ மு­டி­யாது. அவ்­வாறு அவர் நடந்து கொள்­வா­ராயின் கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் அர­சி­யல்­வா­தி­களின் அடி­மை­க­ளாக விளங்­கிய உயர் பாது­காப்பு அதி­கா­ரி­களுக்கும் இவ­ருக்­கு­மி­டையில் எந்த வேறு­பா­டு­க­ளு­மில்­லாது போய்­விடும்.

அசம்­பா­வி­தங்கள் நடந்த மறுநாள் நாம் கிந்­தோட்­டைக்கு விஜயம் செய்த போது மக்கள் மிகுந்த அச்­சத்தில் இருந்­தார்கள். அவர்­க­ளது முகங்­களில் சோகம் இழை­யோ­டி­யது. கூட்டுக் குடும்பம் போல் வாழ்ந்த இரு சமூ­கங்­க­ளையும் பிரித்து ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தே­கப்­பட வைத்­து­விட்­டார்­களே என மக்கள் ஏங்­கினர். தாம் முழுக்க முழுக்க நம்­பிக்கை வைத்­தி­ருந்த பாது­காப்புத் தரப்­பினர் நம்­பிக்கைத் துரோ­க­மி­ழைத்­து­விட்­ட­தாக மக்கள் பகி­ரங்­க­மா­கவே குற்­றம்­சாட்­டினர்.

''நாங்கள் உங்­களை ஒரு­போதும் நம்­ப­மாட்டோம். அல்­லாஹ்­விடம் மட்­டுமே பாது­காவல் தேடுவோம்'' என கிந்­தோட்டை பிர­தேச முஸ்லிம் இளை­ஞர்கள் கடுந்­தொ­னியில் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் கூறி­யது இன்றும் காது­களில் ஒலிக்­கி­றது.

கடந்த அர­சாங்கம் இன­வா­தத்தை நேர­டி­யா­கவே வளர்த்­தது என்றால் இந்த அர­சாங்கம் மறை­மு­க­மாக வளர்க்­கி­றதா எனும் கேள்வி இப்­போது எழு­கி­றது. அளுத்­கம வன்­மு­றை­களைத் தொடர்ந்து இந்த நாட்டு முஸ்­லிம்கள் எடுத்த மிக உறு­தி­யான நிலைப்­பாடு தான் இன­வாத சிந்­தனை கொண்ட ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்கு அனுப்­பி ஆட்சி மாற்றம் ஒன்­றுக்கு வித்­திட்­டது. 

துர­திஷ்­ட­வ­ச­மாக நல்­லாட்சி எனும் போர்­வைக்­குள்ளும் இன­வாத நச்சுப் பாம்­புகள் படுத்­து­றங்­கத்தான் செய்­கின்­றன என்­பதை கிந்­தோட்டை சம்­பவம் நன்­கு­ணர்த்தி நிற்­கி­றது.இதன் பின்னால் அர­சியல் மறை­க­ரங்கள் செயற்­பட்­டுள்­ளன என்­பதை தெளிவாக உணர முடி­கி­றது. பதற்றம் நிலவிக் கொண்­டி­ருந்த சமயம் பொலி­சா­ரையும் விசேட அதி­ரடிப் படை­யி­ன­ரையும் வாபஸ் வாங்கச் செய்­து­விட்டு, வெளிப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வன்­முறைக் கும்­பலை பஸ்­களில் ஏற்­றி­வந்து, விகா­ரையில் கூட்டம் கூட்டி, முஸ்­லிம்­களின் வீடு­களை தேடித் தேடித் தாக்கும் வரைக்கும் சட்­டத்தின் கைகளைக் கட்டிப் போட்­டது யார்? இதற்­கான பதில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இது விட­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு சிறு கண்­டன அறிக்­கையைத் தானும் வெளி­யி­ட­வில்லை என்­பது முஸ்­லிம்­களை அதி­ருப்­தியில் ஆழ்த்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவில் லாஸ் வெகாஸ் துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தை தனது டுவிட்­டரில் கண்­டித்த ஜனா­தி­பதி, தனது நாட்டில் தன்னை வாக்­க­ளித்து சிம்­மா­ச­னத்தில் ஏற்­றிய மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தியைக் கண்­டிப்­ப­தற்கு முன்­வ­ரா­ததன் பின்­னணிதான் என்ன?

எது­ எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் பார­பட்­ச­மற்ற விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் யாரா­க­வி­ருப்­பினும் உச்­ச­பட்ச தண்­ட­னைகள் வழங்­கப்­பட வேண்டும். 

அளுத்­கம சம்­ப­வங்கள் நடந்து 3 வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும் இது­வரை நீதி கிட்­ட­வில்லை. அவ்­வா­றான சூழ்­நி­லையில் கிந்­தோட்டை விவ­கா­ரத்­திற்கும் நீதி கிட்­டாமல் போகுமோ என பிர­தேச மக்கள் அஞ்­சு­கின்­றனர்.

தற்­போது கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களை விடு­விப்­ப­தற்­கான மறை­முக அழுத்­தங்கள் வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் அறிய முடி­கி­றது. சமா­தானப் பேச்­சுக்கள் என்ற போர்­வையில் வன்­மு­றை­யா­ளர்­களை விடு­விப்­ப­தா­னது நிச்­சயம் இன­வாத சக்­தி­க­ளுக்கு மேலும் வாய்ப்­பா­கவே அமையும் என்­பதை மறந்­து­விடக் கூடாது.

முஸ்லிம் சமூ­கத்­திற்கும் இந்த சம்­பவம் படிப்­பினை தரு­வ­தாகும். பிற சமூ­கங்­க­ளுடன் இணைந்து வாழ்­கின்ற போது ஏற்­படும் சிறு சிறு முறு­கல்கள், விபத்­து­களின் போது அவற்றை மிகக் கவ­ன­மா­கவும் தூர­தி­ருஷ்­டி­யு­டனும் கையாளக் கூடிய வகையில் அர­சியல், சிவில் மற்றும் மார்க்கத் தலை­மைகள் முன்­னின்று செயற்­பட வேண்டும். இன்றேல் இவ்­வா­றான பார­தூ­ர­மான விளை­வு­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வரும் என்­பதை மறந்­து­விடக் கூடாது. இது தொடர்பில் நாடெங்­கி­லு­முள்ள கிரா­மங்­களில் மிகுந்த விழிப்­பு­டனும் அவ­தா­னத்­து­டனும் நாம் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.

'முஸ்லிம் சமூ­கத்தின் முதன்மைக் குரல்' என்ற வகையில் விடி­வெள்ளி இன்­றைய இதழ் மூல­மாக தனது கட­மையைச் சரி­வரச் செய்­தி­ருக்­கி­றது என நம்­பு­கிறோம். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம், அளுத்­கம வன்­மு­றைகள் போன்றே கிந்தோட்டை விவகாரத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அதிக பக்கங்களில் இன்றைய இதழை வெளியிட்டுள்ளோம். இது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உரத்துச் சொல்வதற்கான சிறந்த ஆவணமாகவும் பயன்படும். 

அதேபோன்று ஊடக தர்மத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிங்கள் மக்களின் குரல்களையும் இதில் பதிவு செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் கிந்தோட்டை மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக விடிவெள்ளி குரல் கொடுக்கும்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.

விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம் இது

1 comment:

  1. ஆம்,நடந்து முடிந்த திட்டமிட்ட சதி,இவை அனைத்தும் அரசியல் பின்
    புலம் உள்ளது என்பது உறுதி.இதன்
    பின்னஅர் கொழும்பு சேக்ஹ்ஆசாத்சாலி
    சட்டத்தரனி நூர்டீன்,அனைத்து முஸ்லிம்
    அரசியல் கட்சிகள் எல்லோரும் கிந்தேரட் டைக்க்கு பட்டை எடுப்பாகள் எலெக்சன்
    முடியும் வரைக்கும்.இதுதான் இந்நரட்டீன் முஸ்லிம்களுக்கு எழுதப்படாத சட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.