November 23, 2017

"ஜனாதிபதியின் மௌனம், பாதிக்கப்பட்ட மக்களை மேலும் ஏமாற்றமடையச் செய்கிறது"

"சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலை நாட்டுவதன் மூலம் இனவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதில் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் தவறி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்கி வடுவதால் மட்டும் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது போல அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைந்துள்ளன. ஜனாதிபதியோ, கிந்தோட்டை கலவரம் தொடர்பில் வாய்திறந்து எதுவும் பேசாமல்மௌனம் காக்கிறார். இது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் ஏமாற்றமடையச் செய்கிறது" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி- கிந்தோட்டைப் பிரதேசத்தில் நடந்து முடிந்த வன்முறைகள் தொடர்பில் NFGG ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயேஇவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மிக இலகுவாக தடுக்கப்பட்டிருக்கக்கூடிய காலி-கிந்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு முறுகல்நிலை அளுத்கமயில் நடந்தது போன்ற ஒருபாரிய கலவரமாக நடந்து முடிந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடனும் பாரபட்சமின்றியும் நடந்துகொண்டிருந்தால் இந்த அழிவுகளை தடுத்திருக்க முடியும். கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் இந்த விடயத்தில் தமது கடமையைச்செய்யத் தவறியிருக்கிறது.

கிந்தோட்டை வன்முறை தினத்திற்கு முந்திய சில நாட்களாக அமைதியின்மை நிலவி வந்தது தெரிந்ததே. இந்நிலையில் பொலிஸாரும்தொடர்ந்தும் கண்காணிப்புடன் இருந்து வந்தனர். ஆனால் கலவரம் நடந்த சந்தர்ப்பத்தில் திடீரென விசேட அதிரடிப்படையினர் வாபஸ்பெறப்பட்டனர். அந்த உத்தரவை பிறப்பித்தது யார் என்ற கேள்விக்கு அரசாங்கம் இன்னும் பொறுப்புடன் பதிலளிக்கவில்லை.

ஒரு நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பில் உளவுப் பிரிவு இருப்பது வரவிருக்கின்ற அபாயங்களை முன்கூட்டியே கணித்து அதனைஎதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுவதற்காகும். ஆனால், உளவுப் பிரிவினரும் பாதுகாப்புத் தரப்பினரும் இதில்பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளனர். கலவரம் இடம்பெற்ற பிரதேசத்திலுள்ள மத ஸ்தலமொன்றில் இடம்பெற்ற சட்டவிரோத ஒன்று கூடல்குறித்தும், வெளியூர்களிலிருந்து கலவரத்தை நடத்தி முடிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்டோர் விடயத்திலும் பாராமுகமாகவும் பொறுப்பற்றும்நடந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வுகளை கூர்ந்து அவதானிக்கும்போது, கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டியவர்களே அதனை நடத்தி முடிப்பதற்கான மறைமுக ஆதரவுவழங்கியிருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்திலுள்ள பொறுப்பு வாய்ந்தோர் இது தொடர்பில் போதிய கவனமெடுக்காத அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்தனர். இதுவும் நிலவரம்மேலும் குழப்பகரமானதாக மாறுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. இந்த நெருக்கடியான தருணத்தில் காலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசதரப்பு அரசியல்வாதிகளைத் தொடர்பு கொள்ள இயலாமல் போனமை சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்துள்ளது.

இப்போது நஷ்ட ஈடுகள் சிலவற்றை வழங்கிவிட்டால் தமது கடமை முடிந்து விடுகிறது என்ற மனோநிலையுடன் அரச தரப்பினர் இருப்பதாகவேதெரிகிறது. ஆனால், அரசாங்கத்தின் கடப்பாடு இதை விடவும் விரிவானது, பாரதூரமானது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் இந்த பாரிய வன்முறை நடந்து முடிந்த பிறகும் நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்கும் ஜனாதிபதியிடமிருந்து இதுவரை எதுவிதஆறுதல் வார்த்தைகளோ, கண்டனங்களோ, கருத்துக்களோ வெளிவரவில்லை. இது, பாதிக்கப்பட்ட மக்களை மாத்திரமின்றி இந்நாட்டில்அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நேசிக்கும் அத்தனை பேரையும் கவலை கொள்ளவும் ஏமாற்றமடையவும் செய்திருக்கிறது.

இந்நிலையில், இந்தக் கட்டத்திலாவது அரசாங்கம் இனவாதத்தை பரப்புவோர் விடயத்தில் உறுதியான முடிவுக்கு வந்தாகவேண்டும். கலவரங்களைக் கட்டுப்படுத்துதல், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்குதல் போன்ற விடயங்களுக்குமுன்னதாக செய்யவேண்டிய அடிப்படைக்கடமையை இனிமேலாவது அரசாங்கம் செய்யவேண்டும். இனவாத மதவாத பேச்சுக்களும் நடவடிக்கைகளும் யாரால் எந்த வடிவத்தில் செய்யப்பட்டாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கை பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும். இந்நாட்டில் மதரீதியான சிறுபான்மை மக்களுக்குஎதிரான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் யார் என்பது தெரியும். அவர்களுக்கெதிரான ஏராளமான பொலிஸ் முறைப்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இது போன்ற வன்முறைகள் ஏற்பட்டிருக்காது.

எனவே, ஏற்கனவே செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுஇனவாதத்தை பரப்புகின்ற அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களின் இனவாத நடவடிக்கைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளிவைக்க அரசாங்கம் முன்வர வேண்டும். அரசாங்கம் தனது இந்த அடிப்படைக் கடமையைச் செய்யத் தவறியதன் காரணமாகவே இந்தவன்முறைகள் நடந்துள்ளன. எனவே , பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக முழுமையான நஸ்ட ஈட்டை அரசாங்கம் வழங்கவேண்டும். இந்த வன்முறைகளின் பின்னணியில் இருந்த அனைவருக்கும் உரிய தண்டனையும் வழங்கப்பட வேண்டும்."

2 கருத்துரைகள்:

NFGG
You have already made a complain to United nation ..what is the out come ???

What is your aim to gain votes from poor people ?

Still you do not know what is going on in the country ?

அவர் எப்பதான் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு முடிவுகண்டவர்

Post a Comment