Header Ads



இந்தாண்டில் அதிக போட்டிகளில், தோல்வியை தழுவிய அணியாக இலங்கை

இந்தாண்டில் அதிகமான சர்வதேச போட்டிகளில் தோல்வியை தழுவிய அணி எனும் சோதனையான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

ஒரே ஆண்டில் 32 தோல்விகளை சிம்பாவே அணி 2015 இல் பெற்றுக்கொண்டதே இதுவரையிலானசாதனையாக இருக்கும்போது, இலங்கை அணி மொத்தமாக இந்தாண்டில் 34 சர்வதேச போட்டிகளில்தோல்விகண்டுள்ளது.

இலங்கை அணி இந்தாண்டில் 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அதில் 6 ல் தோல்வி, நான்கில்வெற்றியும் பெற்றுள்ளது. 26 ஒருநாள் போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்றுள்ளது. 21போட்டிகளில் இலங்கை தோல்வி அடைந்துள்ளது.

அத்தோடு பன்னிரண்டு ரி 20 போட்டிகளில் 7ல்தோல்வியும் ஐந்தில் வெற்றி யும் கண்டுள்ளது.டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை இருதடவையும், சிம்பாவே மற்றும் பங்களாதேஷ் அணிகளை சொந்தமண்ணில் ஒவ்வொரு தடவையும் இலங்கை அணி வெற்றிகண்டுள்ளது.ஒருநாள் போட்டிகளில் தென் ஆபிரிக்க , இந்திய, பாகிஸ்தான் அணிகளிடம் 5 போட்டிகள் கொண்டதொடரின் அத்தனை ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி இந்தாண்டில் மொத்தமாக நான்கில்மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இந்தியாவையும், இலங்கை மண்ணில்வைத்து சிம்பாவே அணியை இரு தடவைகளும், பங்களாதேஷ் அணியை ஒரு தடவையாக மொத்தமாக

நான்கு வெற்றிகளையும் பெற்றுள்ளது.ரி 20 போட்டிகளில் அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆபிரிக்க மண்ணில் தொடரை வென்று வரலாறுபடைத்தாலும், மொத்தமாகவே ஐந்தில் மட்டுமே வெற்றியும் பெற்றுள்ளது (தென் ஆபிரிக்கா-2,அவுஸ்திரேலியா-2, பங்களாதேஷ்-1)அத்தோடு ஒருநாள் போட்டிகளில் இந்தாண்டில் தொடர்ச்சியான 12 தோல்விகளை கண்டுள்ள இலங்கை

அணி, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில்(ஒருநாள்+ரி 20) தொடர்ச்சியான 16 தோல்விகளையும்கண்டுள்ளது.இம் மாதம் இலங்கை அணி,இந்தியாவை இந்திய மண்ணில் சந்திக்கவுள்ளது. 

No comments

Powered by Blogger.