Header Ads



நாட்டை சிலர், விலைக்கு கேட்கிறார்கள் - சந்திரிகா

நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு நல்ல குறிக்கோள்கள் இருப்பது மாத்திரமன்றி அவற்றை முனைப்புடன் செயற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க தெரிவித்துள்ளனர். 

வெயன்கொட பத்தலகெதர போதி மங்களராமய விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற விழாவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துரைக்கையில், எண்ணங்கள் என்னை போன்ற தனியொருவரை மட்டும் வளர்ப்பதற்கில்லை, இதனால் எனது பையை நிரப்பவோ அல்லது எனது சகோதரர்கள் பையை நிரப்பவோ அல்ல என்று அவர் குறிப்பிட்டார். 

எமது குறிக்கோள்கள் எதிர்கால நோக்கம் கருதியதாக வேண்டும். 

நல்ல குறிக்கோள்கள் மட்டும் இருந்தால் போதாது. இந்த குறிக்கோள்களை செயற்படுத்த தெளிவான வேலைத்திட்டங்கள் இருக்கவேண்டும். 

இந்த சமூகத்தில் நல்ல குறிக்கோள்களையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்த நல்ல தலைவர்கள் இருக்க வேண்டும். 

எல்லாத் தலைவர்களும் செயற்படுத்த வேண்டும். எல்லா மட்டங்களில் வாழும் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளும் தலைவர்கள் இருக்கவேண்டும். 

சிலர் யுத்தத்தை வெற்றிகொண்டதால் நாட்டை விலைக்கு கேட்கின்றார்கள்.  ஆனால், யுத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கை வெற்றிகொண்டவர் நான்.  எனது அரசாங்கம். யுத்தத்தில் வெற்றி கொண்ட கதை முக்கியமல்ல, நாட்டை சீரழித்த நிலையை பார்க்கவேண்டும். இன்னும் எமது நாடு முன்னேராமல் இருக்க என்ன காரணம். 

பிரச்சினை இருப்பதற்கு என்ன காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க கேள்வியெழுப்பியுள்ளார். 

இந்தநிகழ்வில், கலந்து கொண்ட பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உரையாற்றுகையில், நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது ஒரு முக்கியமான விடயமாகும் என தெரிவித்தார். 

ஆனால் இது இலகுவான விடயமல்ல. இங்கு இரண்டு முக்கிய கட்சிகளின் பங்களிப்பு உள்ளது. 

ஒருகட்சி ஆட்சிக்கு வந்தால் மற்றைய கட்சி எதிர்த்து நிற்கும் இதேபோல ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் சுதந்திர கட்சி அதனை எதிர்க்கும், சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய தேசிய கட்சி அதனை எதிர்க்கும். 

ஆனால் இந்தமுறை இந்த நிலையை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். 

கடந்த தேர்தலில் இதனை செய்து காட்டினோம். கட்சியை முன்னெடுத்து செல்வதற்கு பதிலாக நாட்டை முன்னெடுத்துச் செல்லும் காலம் ஏற்பட்டுள்ளது. 

இதனை முன்னெடுப்பது மிகவும் இலகுவானதல்ல. இரண்டு கட்சிகளின் நோக்கங்களும் வெவ்வேறு தன்மையை உடையன. 

அதனால், இந்த இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வது மிகவும் கடினம். 

ஜனாதிபதியும் பிரதமரும் எவ்வாறு செயல்படுகின்றனர் என்று சிந்திக்கின்றேன். 

இன்று எல்லா ஊடகங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகந்திரமாக தமது கருத்துக்களை கூறுவதை காணலாம். 

சுதந்திரமான ஆட்சியே இதற்கு காரணமாகும். ஆனால் கட்சியை முன்னிலைப்படுத்தி பேசுவது அவசியமற்றது என நான் நினைக்கின்றேன். 

நாங்கள் நாட்டை முன்னிலைப்படுத்தி பேசுவதே சிறந்தது.´ என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.