Header Ads



சவுதியில் கைது செய்யப்பட்ட, இளவரசர்கள் எனன செய்கிறார்கள்..?


ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 11 சவுதி இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அந்நாட்டு பொலிசாரினால் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர் .

சவுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலையீட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர். கோடீஸ்வரரான அல்வாலித் கைது செய்யப்பட்டது அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் பொருளாதார உலகிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இவர்கள் ரியாத்தில் உள்ள Riyadh Ritz-Carlton என்ற பைவ் ஸ்டார் ஹொட்டலில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு இவர்கள் ஒரு பெரிய அறையின் மெத்தையில் படுத்திருக்கும் புகைப்படங்களும், ஹொட்டலின் வாயில் உலாவும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நவம்பர் இறுதி வரை 492-அறைகள் கொண்ட ஹோட்டல் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதம் முன்பதிவுகளை மட்டுமே தொடங்குவதாக ஹொட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹொட்டலின் முக்கிய வாயில் பாதுகாப்பு காரணங்கள் கருதி மூடப்பட்டதாகவும், இருப்பினும் தனியார் கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஒரு பின் நுழைவு வழியாக நுழைவதை பார்த்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன ரிப்போர்ட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், இளவரசர்கள் கைது செய்யப்பட்டதால் இவர்களுக்கு சொகுசு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.