Header Ads



நல்லாட்சியை கவிழ்க்க முயற்சி, ஐதேகவினர் வெளிநாடு செல்லத் தடை


ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் 9ஆம் நாள்  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு முடியும் வரையில், ஐதேக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

முன்னரே விடுக்கப்பட்டிருந்த அதிகாரபூர்வ அழைப்புகளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட, இந்தக் காலப்பகுதியில் வெளிநாடு செல்வதற்கு அமைச்சர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க இந்த கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கூட்டு எதிரணியினருடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.