Header Ads

ஜிந்தோட்ட வன்முறை, நல்லிணக்கத்துக்கு விடுக்கப்பட்ட சவால்

காலி, கிந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற சிங்கள - முஸ்லிம் வன்முறைக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன், அரசின் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இது காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காலி, கிந்தோட்டைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சிங்களம், முஸ்லிம் மக்களிடையே முறுகல் ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம் உருவானது.

இதையடுத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.  

சிறுபான்மை இனத்தவரின் பெரும்பாலான வாக்குகளால் ஆட்சிப்பீடமேறிய இந்த அரசிலும்  இவ்வாறான அட்டூழியங்கள் இடம்பெறுகின்றமையானது பாரிய விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையிலேயே, இது விடயம் தொடர்பில் தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்குப்  பொறுப்பான அமைச்சர் மனோ கணேசனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

'இந்த முறுகல் நிலைமையானது அரசின் சமாதானம், சகவாழ்வு செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட பாரிய சவாலாகவே இருக்கின்றது. இன மோதல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை அரசு ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்காது. எனவே, இச்சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு எதிராகவும் இதுதொடர்பில் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராகவும் கடுமையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"- என்றார்.

4 comments:

  1. ஒரு நேர்மையான, திறமையான அரசியல்வாதியென்பதை அடிக்கடி நிரூபிக்கிறீர்கள் சேர்.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் சிங்கள பொலீஸ், சிங்கள ஆமி, சிங்கள STF... etc. இருக்கும் வரையும் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதன் யதார்த்தத்தை புரிந்தும் புரியாமல் நடிக்கும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை இனப்பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதில் மனோகணேசனும் விதி விலக்கல்ல. முடிந்தால் சிங்கள மயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தரப்பை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் தரப்பாக மாற்றி அமையுங்கள். இந்த சிங்கள அரசாங்கத்து காடையர்கள் பாதுகாப்பு தரப்பில் இருக்கும் வரை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

    மதிப்புக்குரிய மனோ கணேசன் அவர்களே, ஜிந்தொட்ட மக்கள் கூறுகிறார்கள் STF, பொலீஸ் தங்களது வீடுகளை கடைகளை, உடைமைகளை அடித்து நொறுக்கினார்கள் என்று,. பாதுகாப்பு தரப்பு பார்த்து கொண்டு இருக்கும் போதே சிங்கள காடையர்கள் முஸ்லிமகளையும் அவர்களது உடமைகளையும் அடித்து நொருக்கிறார்கள் என்றால்... நல்லிணக்க அமைச்சை வைத்துக்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்... இத்தனை முறைப்பாடுகளும் முஸ்லீம் தலைவர் என்று கூறப்படும் சகோதரர் ஹக்கீம் அவர்களிடம் கூறுகிறார்கள்... அவரால் ஒன்றும் செய்ய முடியாது ( political-impoten ) என்பதை அறிந்தும் அந்த மக்கள் அவரிடம் கூறுகிறார்கள் என்பதை நினைத்து வருந்துகிறோம்.

    எனவே இலங்கையில் சிங்கள முப்படை இருக்கும் வரை நல்லிணக்கம் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. முடிந்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஸ்ரீலங்கா முப்படையை உருவாக்குங்கள்.

    ReplyDelete
  3. இந்த நாட்டில் சிங்கள பொலீஸ், சிங்கள ஆமி, சிங்கள STF... etc. இருக்கும் வரையும் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதன் யதார்த்தத்தை புரிந்தும் புரியாமல் நடிக்கும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை இனப்பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதில் மனோகணேசனும் விதி விலக்கல்ல. முடிந்தால் சிங்கள மயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தரப்பை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் தரப்பாக மாற்றி அமையுங்கள். இந்த சிங்கள அரசாங்கத்து காடையர்கள் பாதுகாப்பு தரப்பில் இருக்கும் வரை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

    மதிப்புக்குரிய மனோ கணேசன் அவர்களே, ஜிந்தொட்ட மக்கள் கூறுகிறார்கள் STF, பொலீஸ் தங்களது வீடுகளை கடைகளை, உடைமைகளை அடித்து நொறுக்கினார்கள் என்று,. பாதுகாப்பு தரப்பு பார்த்து கொண்டு இருக்கும் போதே சிங்கள காடையர்கள் முஸ்லிமகளையும் அவர்களது உடமைகளையும் அடித்து நொருக்கிறார்கள் என்றால்... நல்லிணக்க அமைச்சை வைத்துக்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்... இத்தனை முறைப்பாடுகளும் முஸ்லீம் தலைவர் என்று கூறப்படும் சகோதரர் ஹக்கீம் அவர்களிடம் கூறுகிறார்கள்... அவரால் ஒன்றும் செய்ய முடியாது ( political-impoten ) என்பதை அறிந்தும் அந்த மக்கள் அவரிடம் கூறுகிறார்கள் என்பதை நினைத்து வருந்துகிறோம்.

    எனவே இலங்கையில் சிங்கள முப்படை இருக்கும் வரை நல்லிணக்கம் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. முடிந்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஸ்ரீலங்கா முப்படையை உருவாக்குங்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மனோ. முஸ்லிம்களுக்கும் மலையக/தென் இலங்கை தமிழருக்குமிடையிலான ஒருவரை ஒருவர் தாங்கும் ஒற்றுமை ஓங்கட்டுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.