November 16, 2017

புலி பயங்கரவாதிகளை மீள உருவாக்குவதில், கூட்டமைப்பின் ஒரு குழு முனைப்பு - லங்காதீப

புலிகளின் மாவீரர் வாரம் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை அளுஸ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு சிங்கள பத்திரிகையான லங்காதீப கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈழ தேசமொன்றின் கனவினை தோளில் சுமந்து கொண்டு இருந்த புலித் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளும் புலிகள் அமைப்பின் முதலாவது உறுப்பினர் சாவடைந்த நாளையும் நினைவுகூறப்படும் புலிகளின் மாவீரர் வாரம் நவம்பர் மாதம் 21ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரை யுத்த சமயத்தில் புலிகளின் தலைவரின் தலைமையில் அந்த அமைப்பு கடந்தபல வருடங்கள் நினைவுகூரியது.

யுத்தத்திற்கு பின்பு புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் ஒரு சிறுகுழுவினர் தலைமையில் கடந்த வருடம் அதே நிகழ்வுகளை நடாத்த தொடங்கியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்தவர்கள் அரசின் நெகிழ்வுத் தன்மையினை தமக்கு சாதகமாக்கி தார்மீக அந்தஸ்தினை பெற்று இலங்கை மக்களையும் படையினரையும் கொன்ற புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் புனிதர்களாக தமிழ் மக்களிடமும் சர்வதேசத்திடமும் நிறுவ முயல்கின்றனர்.

இதனை முன்னெடுப்பவர்கள் கடந்த காலங்களில் உயர் அரசபதவிகளில் இருந்து ஊதியம்பு பெற்றுக்கொண்டு புலிகளுக்கு மறைமுகமாக செயல்பட்டவர்களாகும்.

யுத்தத்தில் கைதுசெய்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் தமது கடந்தகால தவறுகளை உணர்ந்து அரசியல் கட்சிகளாக உள்ளூராட்சி சபை தேர்தல்களில் பங்கெடுக்க முனைகின்றனர்.

அவர்களின் புதிய கட்சி ஒன்றின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்றது அதில் கருத்து தெரிவித்த முன்னாள் போராளிகள்,

மாவீரர் தினத்தை கொண்டாடுவதை விடுத்து மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை தமிழ் தலைவர்களும் கட்சிகளும் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் புலிகளின் தனிநாட்டு கொள்கையின் பிரதிபலிப்பாக இராணுவத்தினரை அகற்றும் நோக்கத்துடன் புலிகளின் தேராவில் மயானத்தை அடையாளப்படுத்தி அங்கு தமது நினைவு நாளை அனுஸ்டிக்க இராணுவ முகாமுக்குள் செல்வதற்கு சிவாஜிலிங்கம், குருகுலராஜா, சிறிதரன் இ.பசுபதிப்பிள்ளை போன்றவர்கள் முயற்சித்துள்ளனர்.

அதனை தடுத்த படையதிகாரிகள் மேலிட அனுமதியுடன் தான் படைமுகாம் பகுதிகளில் நீங்கள் நடமாடமுடியும் என எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை, சிறிதரன் போன்றவர்கள் தமது சிறப்புரிமைகளுடன் பாராளுமன்ற அனுமதியுடன் தாம் மாவீரர் நினைவுநாளை கொண்டாடுவோம். தம்மை யாரும் தடுக்கமுடியாது என்று சவால் விட்டுள்ளனர்.

எனவே ஈழக் கனவு கனவாகவே ஆகி யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பம் ஒன்றில் மாவீரர் என்ற நாள் எதற்கு என்பதை சிந்திக்க வேண்டும். இங்கு தேவையுள்ளது யாருக்கு? எதனை முன்னிட்டு? என்பது தற்போது புரிகின்றது.

கடந்த 2016ம் வருடத்திலும் மயானமெதுவும் இல்லாத கனகபுரம் மாவீரர் நினைவு கூரலுக்கு பங்குபற்றியது மிகவும் சொற்ப அளவினராகும். ஆனால் சேனாதிராசா, சிறிதரன், பசுபதிப்பிள்ளை, குருகுலராஜா போன்ற அரசியல் அதிகாரம் உள்ளவர்களே அதிகமாக கலந்து கொண்டனர்.

இம்முறை முக்கியமாக மன்னார் பெரிய பண்டிவிரிச்சான், கிளிநொச்சி, கனகபுரம் மற்றும் தேராவில் பிரதேச முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், மற்றும் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு போன்ற பிரதேசங்களில விரிவுபடுத்த கூட்டமைப்பின் பிரதிதிகள் சிலர் முயற்சிக்கின்றனர்.

அதற்காக ஏற்கனவே அந்தப் பிரதேசங்களில் புலிப்படையின் அகற்றப்பட்டுள்ள மயானங்கள் இருந்த பிரதேசங்கள் வெளியாக்குதல்கள் நடைபெறுகின்றது.

சில நேரம் எதிர்காலத்தில் இந்த நிலங்களில் அகற்றப்பட்ட கல்லறைகளுக்குப் பதிலாக மறுபடி நிர்மாணமொன்றையும் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் இருக்கக் கூடும்.

கடந்த காலங்கில் களவாக ஓரிரு இடங்களில் மாவீரர் நினைவுகளை கொண்டாடியவர்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பகிரங்கமாக் கொண்டாட முயல்வது நாட்டுக்கு ஆபத்தானது.

யுத்த சமயங்களில் இந்த அரசியல்வாதிகள் யார் என்பதை கேட்பதற்கோ அல்லது காண்பதற்கோ இருக்கவில்லை. இன்று அவர்கள் இந்த இடத்திற்காவது செல்வது யாரால் என்பதை இரண்டு தடவைகள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் பொறுமைக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஒரு நாளும் அனுபவிக்காத சுதந்திரம் தற்போது கிடைத்துள்ளதால் அதைப் பாதுகாப்பதற்கு அதிகாரத்திலுள்ள இல்லாத அனைத்து தரப்பினரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

ஆனால் தற்போது அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. புலிகளின் நிழல் உலகத்தில் அனேகமான நாடுகளில் தலை தூக்குவதற்கு கடும் முயற்சி செய்யும் போது அந்த அமைப்பு பிறந்த எமது நாட்டில் இவ்வாறான சூழலொன்று உருவாகுபோது அதை இன்னுமொரு நற்சகுன அமைதி கோணத்தில் நோக்கி இருண்ட பிசாசுகளுக்கு உயிர் கொடுப்பதற்கு இயலாதவாறு செயற்பட வேண்டும்.

இவ்வாறு சிங்களப்பத்திரிகை ஒன்று நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment