Header Ads



பணிநேரம் முடிந்ததால், விமானத்தை இயக்க மறுத்த விமானி


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு ஒரு ஏர் இந்தியா விமானம் 40 பயணிகளுடன் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மிகவும் காலதாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூருக்கு சரியாக இரவு 9 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் இரவு 1.30 மணிக்கு சென்றிருக்கிறது. மேலும் அங்கிருந்து டெல்லி கிளம்புவதிலும் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் நிலவும் புகை மூட்டம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் சரியாக 2 மணிக்கு விமானம் நடைபாதையில் ரெடியாக கிளம்புவதற்கு நின்று இருக்கிறது. ஆனால் விமானத்தில் இருந்த அந்த ஏர் இந்தியா விமானி உடனடியாக விமானத்தை விட்டு கீழே இறங்கி இருக்கிறார். 2 மணியுடன் அவரது பனி முடிவடைந்ததால் அவர் விமானத்தைவிட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த விமானத்தை அப்போது உடனடியாக இயக்குவதற்கும் எந்த விமானியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அந்த விமானத்தின் பயணிகள் அனைவரும் பாதியில் இறக்கி விடப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் பயணிகளிடம் பேருந்தில் செல்லுமாறு ஏர் இந்தியா நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் பயணிகள் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். சில பயணிகள் அங்குள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு நேற்று காலை விமானத்தில் அனுப்பப்பட்டனர். மற்ற பயணிகள் பேருந்து மூலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.

விமானத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அந்த விமானி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அந்த விமானி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டு இருக்கிறது. அவர் ஏற்கனவே அவரது நேரத்தையும் தாண்டி அதிக நேரம் உழைத்து இருப்பதாக கூறியுள்ளனர். இது போல் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நடத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இந்தியா, பாகிஸ்தான் விமானங்களில் யாரும் பயணிப்பதைத் தவிக்கவும்.

    இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் விமானங்களும் தரம் கெட்டவை.
    இந்த நாடுகளும் தரம் கெட்டவை.
    இந்த நாட்டு மக்களும் தரம் கெட்டவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இலங்கை நாட்டவர்கள் மட்டும் என்ன சுத்தமானவர்களா?????

      Delete
  2. இது Airline யின் தவறு. விமானி அல்ல.

    ஓய்வில்லாத, அதிக நேர வேலைப்பழுவால், விமானி தவறிழைத்து, விமானம் விபத்து ஆகியிருந்தால்?

    ReplyDelete
  3. இந்திய விமானியாக இருந்தாலும், விமானமாக இருந்தாலும், அதில் தரும் சாப்பாட்டில் இருந்து விமானப் பணியாளர்களின் அசமந்தப் போக்குகள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    உலகத்திலே மிகவும் மோசமான தரத்தில் உள்ளவைதான் இந்திய விமான சேவைகள்.

    ReplyDelete

Powered by Blogger.