Header Ads



டொனால்ட் ட்ரம்புக்கு, மரண தண்டனை விதித்த வடகொரியா


டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற காலம் முதல் வடகொரியாவையும் அதன் தலைவர் கிம் ஜொம் யுங்யையும் அவமதிக்கும் வகையில் தூற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வடகொரிய உத்தியோக பூர்வ அரச செய்தி தாளில் வரையப்பட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பிற்கு மரண தண்டனை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அவரின் நடவடிக்கைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தின் போது கொரிய எல்லைக்கு வருகைத்தர இருந்த போதிலும் இறுதி நேரத்தில் அதனை ரத்து செய்துள்ளார்.

இது அவரின் கோழைத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவிற்கு விஜயம் செய்த அவர் அங்கு உரையாற்றுகையில் வடகொரியா பாரிய இராணுவ ஆட்சியை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. நல்ல வேளை, வட கொரியா முஸ்லீம் நாடல்ல.

    அப்படி இருந்தால், வட கொரியா இப்போது சாம்பலாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இல்லாவிட்டாலும் சாம்பலாகும் வெகு சீக்கிரம.் அமெரிக்காவின் பொறுமையை கோழைத்தனமாக எண்ண வேண்டாம்

      Delete
    2. ஐயோ ஐஐயோ உன்னை நினைத்தால், அழுவதா? சிரிப்பதா?
      திறந்த வீடுகளில் நுழையும் .....புழுத்த நாய்போல ஏன்றா எல்லாத்திலும் மூக்கை நுழைக்கிறாய்?

      Delete
  2. வட கொரியா சாம்பலாகும்போது, அமெரிக்காவின் அரைவாசி சுடுகாடாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.