Header Ads



எயார்டெல் ரிசார்ஜ் அட்டைகள் திருடப்படுவது ஏன்..? நாடு முழுவதும் ஆச்சரியம்

நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய திருடர்கள் திருடிய பொருள் தொடர்பில் தகவல் வெளியானது இலங்கையின் பல பாகங்களிலுள்ள தொலைத்தொடர்பு கடைகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான சீ.சீ.டீ.வி காணொளிகள் தொடர்ந்தும் வெளியாகி வருகின்றன.

இந்த அனைத்து கடைகளில் ஒரே பொருள் திருடப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருளுக்கான பணமும் மேசை மீது திருடர்களால் வைக்கப்பட்டுள்ளது.

அதிக இலாபங்களை கொண்ட 99 ரூபா எயார்டெல் ரிசார்ஜ் அட்டைகளை மாத்திரமே இந்த நபர்களால் திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞர்களுக்கு “அட்டை திருடர்கள்” என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த திருட்டு நடவடிக்கை தொடர்பில் நாடு முழுவதும் மக்கள் ஆச்சரியமடைந்த போதிலும், கடை உரிமையாளர்கள் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் அல்ல என குறிப்பிட்டுள்ளனர்.

99 ரூபாய் அட்டைகளில் அதிக நன்மைகள் உள்ளதாகவும், அந்த அட்டை நிறைவடைவதற்கு முன்னர் பெற்றுக் கொள்வதற்காக திருடுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

99 ரூபா அட்டை மூலம் 1000 இலவச குறுந்தகவல்களும், 350 MB இலவச டேட்டா மற்றும் 99 நிமிடங்களுக்கு பேசுவதற்குமாக சலுகைகள் உள்ளது.


இவ்வாறான சலுகைகளுடன் கூடிய மீள்நிரப்பு அட்டை குறித்த நிறுவனத்தினால் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் குறித்த மீள் நிரப்பு அட்டைகளை திருட முயற்சிக்கப்படுவதாக தொலைத்தொடர் நிலையங்களை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.