Header Ads



மஹிந்தவின் முதலாவது தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம், திரண்டுவந்த மக்கள் கூட்டம் - வீடியோ


எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்காக கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் முதல் பேரணி அனுராதபுரத்தில் இன்று -12- இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த பேரணி இடம்பெற்றது.

இந்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வாசுதேக நாணாயக்கார , விமல் வீரவன்ச மற்றும் கடந்த தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கீதா குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

3 comments:

  1. இன்று வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் களநிலவரங்களை மையப்படுத்தி நோக்குகின்றபோது மகிந்தவின் வரவு இன்றியமையாத விடயமோ என எண்ணத்தோன்றுகின்றது.
    வடக்கு கிழக்கு இணைப்பு, எல்லைநிர்ணயம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என அனைத்தும் சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு அஅதுவாகவே நடந்துவருகிறது.
    இதனைத்தடுத்து நிறுத்த அரசியல் மாற்றம் தேவையெனில் தமது தனிப்பட்ட விடயங்களை கிடப்பில் போட்டுவிட்டு மகிந்தவுடன் இணைய தயாராகவே இருக்கவேண்டும்.
    சிங்கள மக்களின் கதாநாயகனாக மகிந்த கருதப்படும் நிலையில் அதனைப் புறம்தள்ளிவிட்டு, எதனையும் விட்டுத்தர விருப்பமின்றி முஸ்லிம்களின் கழுத்தில் கத்தியைப்பாய்ச்ச நினைக்கும் தமிழர்களிடமிருந்து சமுகத்தைப்பாதுகாக்க மகிந்தவை துரும்பாக பயன்படுத்த அரசியல் தலைவர்கள் தமது ஈகோவை இறக்கி வைக்க வேண்டியும் ஏற்படலாம். இதற்கு எமது அரசியல் தலைமைகள் முன்வராதபோது 2015 ல் நடந்த கதையாக தலைமைகளை புறக்கணித்துவிட்டு மக்கள் மாற்றுஅணியை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாமல் போகலாம்.

    ReplyDelete
  2. எந்த மாற்றமுமில்லை மக்களால் விரட்டப்பட்ட அதேமூஞ்சிகள் அதே தலைவர்கள்,உயர்நீதிமன்றத்தினால் பாரலுமன்றத்தின் உறுப்பினர் பதவி நீக்கப்பட் சுவிஸ் நாட்டைச்சேர்ந்த ஒரு புதுமுகம் கீதா குமாரசிங்க மட்டும்,மேலும் ஏனைய பகுதிகளிருந்து பேருந்தின் மூலம் ஏற்றி அழைக்கப்படும் அதே மக்கள் ஆகமொத்தம் மஹிந்தவிற்கு பின்னால் உள்ள மாக்கள் இவ்வளவுதான்!

    ReplyDelete
  3. இலங்கையின் இன்னல்கள் தீர்த்த தலைவன், மேற்கத்தைய எந்த சக்திகளுக்கும் அடிபணியாமல், செய்ய வேண்டியதை செய்து முடித்த ஒருவன், 60 வருடகாலத்தில் நாம் பார்த்திராத உள்கட்டமைப்புகளை இலங்கையில் செய்து சாதித்த தலைவன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டும் ஆதரவு கொடுத்திருந்தால் இனப்பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கண்டிருக்க கூடிய ஒரு தலைவன், மஹிந்த இராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது எனது விருப்பம்!

    ReplyDelete

Powered by Blogger.