Header Ads



ஜிந்தோட்ட விடயத்தில், தோல்வி அடைந்துள்ளோம் - பூஜித் ஜெயசுந்தர

காலி - கிங்தொட்டையில் அமுலாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்றுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கிங்தொட்டையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று இன்று காவற்துறை மா அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு தரப்பினர், அரச பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசூந்தர, இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் தோல்வி அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

காவற்துறையினர், மதத்தலைவர்கள், விசேட அதிரடிப்படையினர், அரசாங்கம், சமுக அமைப்புகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைவரும் இந்த சம்பவத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தாங்கள் தோல்வி அடைந்த இடத்தில் இருந்து மீண்டும் நிலைமையை வெற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நாட்டைப் பாதுகாக்க வேன்டுமாணின் - இனவன்முறையை வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்த ஜனாதிபதி பிரதமர் பொலிஸ்மா அதிபர் இவர்கள் அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து தீரவிசாரணை செய்து உரிய தண்டனைணை இவர்களுக்கு வளங்கவேன்டும் -

    இல்லையென்றால் இந்த நாட்டின் அழிவு ஆரம்பித்து விட்டது என்பதை சரித்திரம் நாளை பறைசாற்றும்.

    ReplyDelete

Powered by Blogger.