Header Ads



சிறைதான் பரிசு என்றால், பிரச்சினை இல்லை - கோத்தபாய

“உயிரை பணையம் வைத்து இந்த நாட்டை விடுவித்த என்னை சிறையில் அடைப்பதுதான் அதற்கு பரிசு என்றால் அதில் பிரச்சினை இல்லை” என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அரசாங்கம் கைது செய்ய தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பயப்பட வேண்டாம்... நீங்கள் ஒரு போதும் கைது செய்யப்படமாட்டீர்கள். அதற்கு இந்த நாயாட்ச்சி அனுமதிக்காது...உங்களை கைது செய்ய வேண்டியது நாட்டை காப்பாற்றியமைக்கு இல்லை.. எங்களின் பணத்தில் உங்களின் பெற்றோருக்கு ஞாபகார்த்த கட்டிடம் கட்டியமைக்கு... களத்தில் நின்று கட்டளை வழங்கிய தளபதியை கைது செய்ய முடியும் என்றால் ஊழல் செய்த உங்களை கைது செய்வதில் எந்த தவறும் இல்லை.. ஆனாலும் நீங்கள் கைது செய்யப்படமாட்டீர்கள்...அதற்கு நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடமாட்டார்கள்...

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க..

      Delete
  2. Re-union of My3 & Mahinda is very soon.

    ReplyDelete
  3. நீங்கள் நாட்டை விடுவித்தீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் யாரையும் கொல்வதற்கோ பொதுப்பணத்தை கொள்ளையடிப்பதற்கோ உங்களுக்கு உரிமையில்லை

    ReplyDelete

Powered by Blogger.