Header Ads



அமெரிக்க மக்களுக்கு, மைத்திரியின் ஆழ்ந்த அனுதாபங்கள்

டெக்சாஸ் மாநிலத்தின், பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை அரசு அனுதாபம் வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் நேற்று துப்பாக்கிச்சூட்டு சம்பம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தினூடாக இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

4 comments:

  1. நாடே பெற்றோல் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறது.... எங்களை பார்க்க அனுதாப பட இவனுக்கு நேரமில்லை...... அமெரிக்காவிற்கு அனுதாபம் சொல்ல வந்துட்டான்....

    ReplyDelete
  2. He did not feel sorry for Rohingya shame on you Mr President

    ReplyDelete
  3. ஏனனில் அது அமெரிக்கா

    ReplyDelete
  4. ரோஹிங்கிய மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்க, மைத்திரிக்கு என்ன விசரா?

    அவர்களால், மைத்திரிக்கு என்ன லாபம்?

    அமெரிக்க மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தால், பயன்படுத்த முடியாத கப்பல்களையாவது அமெரிக்க தூக்கித்தரும்.

    ReplyDelete

Powered by Blogger.