Header Ads



சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டார்

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று (14) ஜனாதிபதியை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் அஸாத் சாலி தெரிவித்த தகவல்கள் வருமாறு

“சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். அதன் போது செயலாளர் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் ஒன்று உருவாக்குவத தொடர்பிலும் அதன் தேவைகள் குறித்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

பின்னர் ஜனாதிபதியைச் சந்தித்த போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார் என அஸாத் ஸாலி என்னிடம் தெரிவித்தார்.

 . – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

1 comment:

  1. தமகத்தான தர்மம் எது?
    =====================

    1870. அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:🌴

    ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,
    ”அல்லாஹ்வின் தூதரே! மகத்தான தர்மம் எது?” என்று கேட்டார். 🌴
    அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்).🌴

    உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)” என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! 🌴
    ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.🌴

    ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத்
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

    ReplyDelete

Powered by Blogger.