Header Ads



வசீம் படு­கொலை - நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் சந்­தே­கத்­துக்கு இட­மான பல தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று -08- கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்­கிக்கு அறி­வித்­தது. 

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே விசேட மேல­திக அறிக்கை ஊடாக இதனை குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

அதன்­படி கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்ள சந்­தே­கத்­துக்கு இட­மான தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உரிய நபர்­களின் அடை­யாளம் மற்றும் நட­வ­டிக்­கை­களை  உறுதி செய்­து­கொள்­வ­தற்­கா­க நிறு­வ­னங்கள் பல­வற்றில் இருந்து தக­வல்­களைப் பெற்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு மேல­திக நீதிவான் ஜெய ராம் டொஸ்­கிக்கு அறி­வித்­தது.

அதன்­படி வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சந்­தே­கத்­துக்கு இட­மான தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உரிய சந்­தே­கத்­துக்கு இட­மான நபர்­களின் அடை­யாளம் மற்றும் நட­வ­டிக்­கை­களை உறுதி செய்ய குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம், ஆட்­ப­திவு திணைக்­களம் மற்றும் தேர்­தல்கள் ஆணைக்குழு மற்றும் மோட்டார் வாகன பதிவுத் திணைக்­களம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து தக­வல்­களைப் பெற்று விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

 இத­னி­டையே நேற்று வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது, சந்­தேக நப­ராக பெய­ரி­டப்பட்­டுள்ள முன் னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர மன்றில் ஆஜ­ரா­காத நிலையில், அவ­ருக்கு பிடி­யாணை பிறப்­பிக்க பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்­க­வினால் மன்றில் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் அவர் சுக­யீனம் கார­ண­மாக சிகிச்சை பெறு­வ­தா­கவும், விசேட வழக்­காக இந்த வழக்கு பார்க்­கப்­ப­டு­வதால் வைத்­தி­யர்கள் மருத்­துவ சான்­றிதழ் அளிக்க முன்­வ­ர­வில்லை எனவும் ஆனந்த சம­ர­சே­க­ரவின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்னாண்டோ இதன்­போது நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.

இந் நிலையில் நேற்று பிடி­யாணை பிறப்­பிக்­காத நீதிவான் அடுத்த தவ­ணையில் ஆனந்த சம­ர­சே­கர மன்றில் கண்­டிப்­பாக ஆஜ­ராக வேண்டும் எனவும் நேற்று மன்றில் ஆஜ­ரா­காத­தற்­கான கார­ணத்தை அவர் மருத்­துவ அறிக்கை ஊடாக மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனவும் உத்­தரவிட்டார்.

 இத­னை­விட நேற்று குற்றப் புல­னாய் வுப் பிரிவு விசேட கடிதம் ஊடாக,  இவ்­வ­ழக்கின் தடயப் பொரு­ளாக உள்ள வஸீம் தாஜு­தீனின் கைய­டக்கத் தொலை­பே­சியை விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக நீதிமன்றிடம் கோரியது. புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த கையடக்கத் தொலைபேசியானது விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்ட நிலையில் வழக்கானது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.