Header Ads



இலங்கையை விட்டு வெளியேறுகிறது ‘ஒகி’


இலங்கைக்கு தென்மேற்கே கொழும்பில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ள புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், வங்க கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், நாட்டைவிட்டு வெளியேறிவருவதாகவும் நாளை மலை மழைவீழ்ச்சி குறைவடையுமெனவும் இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவும் இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல்  இந்தியாவின் தென் மாவட்டங்களை தாக்கி இலட்சத்தீவுகளை நோக்கி நகரும் என்று தெரியவந்துள்ளது. இந்தப் புயல் தரைப் பகுதியை தாக்கும்போது 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘ஒகி’ புயல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பலத்த சூறைக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதாகவும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தென்தமிழகத்தின் அநேக இடங்களில் எதிர்வரும் 36 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்‌டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு தெற்கே - தென்கிழக்கில் 70 கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதாகவும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தென்தமிழகம் மற்றும் தெற்கு கேரளா மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 17:67)

    (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
    (அல்குர்ஆன் : 17:68)

    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.