Header Ads



சிவப்பு எச்சரிக்கை


மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு, வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்து வருவதை அடுத்தே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடற்படையினரும் கடலுக்குச் செல்லும் போது கூடிய அவதானத்துடன் இருக்கவேண்டுமென்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை, சில நாட்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, தெற்குக்கான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக, ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று வீசிய கடும் காற்றுக் காரணமாக காலி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அங்கு மரங்கள் மு​றிந்து விழுந்துள்ளமையால், சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

1 comment:

  1. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
    (அல்குர்ஆன் : 10:22)

    ReplyDelete

Powered by Blogger.