Header Ads



பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம், எப்படி அதிகாரத்தை பரவலாக்கும்..?

பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம் எப்படி அதிகாரத்தை பரவலாக்கும் என கூட்டு எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கைக்கு நாள் ஒன்றுக்கு 2500 மெற்றிக் டன் பெற்றோல் தேவைப்படுகிறது.

அதனை போதுமான வகையில் களஞ்சியப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட இப்படியான பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இலங்கை அரசாங்கம் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு பயப்படுகிறது.

இதன் காரணமாக நிராகரிக்கப்பட்ட எரிபொருளை மீண்டும் மீண்டும் இலங்கை ஏற்றுமதி செய்யும் நிலைமை காணப்படுகிறது எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் இம்முறை தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி மிகப் பெரிய கூட்டணியின் கீழ் போட்டியிடும். இதன் முதல் கட்டமாக அனுராதபுரத்தில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடத்தப்படும்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டின் தலைவராக்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவும் கலந்துக்கொண்டு உரையாற்றினார். எதிர்வரும் தேர்தலை அரசாங்கத்திற்கு செய்தியை வழங்கும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.