November 01, 2017

முஸ்லிம் அரசியல்வாதிகளை மிரளச் செய்துள்ள, சாய்ந்தமருது மக்களின் துணிகர தீர்மானங்கள் - தக்பீர் முழக்கத்துடன் நிறைவேற்றம்


உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தை நடாத்தியிருந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இறுதி நாளான 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் முன் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் சாய்ந்தமருது பிரகடனம் ஒன்றை மக்களின் தக்பீர் முழக்கத்துடன் வெளியிட்டது.

குறித்த பிரகடனத்தை சாய்ந்தமருது உலமாசபையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.சலீம் (ஸர்கி) வசித்தார்.

சாய்ந்தமருதின் மூன்று தசாப்த கால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தருமாறு தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரூடாக உரிய கட்சித் தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் பலவழிகளிலும் முயச்சிகள் முன்னெடுக்கப்பட்டும்  நம்பிக்கையூட்டும் போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, துரோகமிளைக்கப்பட்டு ஒரு துர்ப்பாக்கியகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாது, இவ்வூரின் பொதுமக்கள் வீதிக்கு வந்து மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் விதமாக கட்சித்தலைவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பான அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுந்த பதிலை இதுவரை வழங்காததன் பின்னணியில் 2017.11.01 ம் திகதியாகிய இன்று சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்மாப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைமையின் கீழ் உலமாக்களும், வர்த்தக சமூகமும்,அனைத்து சிவில், இளைஞர் அமைப்புக்களும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வது  தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலான  சாய்ந்தமருதுப் பிரகடனம் பின்வருமாறு.

1.            தொன்றுதொட்டு காலம் காலமாகப் பேணிவரும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நாட்டின் ஒற்றுமைக்கும்,இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவண்ணம் பேணிப்பாதுகாக்க எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்

2.            சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வளங்களும், அடிப்படைத் தகுதிகளும் சந்தேகமின்றித் தெளிவாகவே இருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றோம்.

3.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு எல்லைக்குள் எல்லா அரசியல் கட்சிகளினதும் சகல விதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ ஒத்துழைப்போ வழங்குவதில்லை.

4.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, இதற்குப் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது –மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாயல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்துதல்.

5.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,  சாய்ந்தமருது- மாளிகைக்காடு எல்லைக்குள் இடம்பெறுகிண்ற எந்தவிதமான நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த உள்ளுர் அரசியல் பிரமுகர்களை அழைக்காதிருத்தல்.

6.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,இப்பிரதேச எல்லைக்குள் எந்தவிதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும், கட்சி செயலகங்களுக்கும் இடமளிக்காதிருத்தல்.

7.            சாய்ந்தமருது மக்களுக்கு நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய தனியான உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதமாக நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல் இருக்கின்ற ஒன்றினை முன்னிலைப்படுத்தி கல்முனையை நான்காகப் பிரித்தே சாய்ந்தமருதுக்கான தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமற்ற கோரிக்கையாகும்.

8.            இந்தப் பிரகடனத்தை மீறும் விதமாகச் செயற்படும், செயற்பட முயற்சிக்கும், அல்லது அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற எமதூரைச் சேர்ந்த அனைவரும் இவ்வூரின் ஜமாஅத் கட்டுப்பாட்டை மீறியவராகக் கருதப்படுவர்.

9.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தனிநபர்கள் அனைவரும் துரோகிகளாவர்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபை,
உலமா சபை
பொது அமைப்புகள் ஒன்றியம்
01. 11. 2017

10 கருத்துரைகள்:

It would have been better to have voting system to get people support for the above request. Rather than few people drafted it and ask it to follow.

Dear brother Muslim way. what the people of Sainthamaruthu did is Islamic way. leaders can decide for people what you says is not required

சாய்ந்தமருது மக்கள் ஏன் உள்ளுராட்ச்சி சபை கோரிக்கையை முன்வைக்கிறார்கள் என்பதை விளங்கி அதட்குத்தேவையான மாற்றுத் தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் காலம்கழித்த அரசியல் தலைமைகளின் திருகு தாளத்தின் விளைவே இது.

கல்முனை என்பது சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, பாண்டிருப்பு என எல்லோருக்கும் உரியதா அல்லது கல்முனைக்குடிக்குமாத்திரம் உரியதா என்ற சந்தேகமே இதர்க்குக்காரணம். கல்முனை எல்லோருக்கும் பொதுவானதென்றால் மக்கள் விகிதாசாரத்திட்க்கேட்ப கல்முனை வியாபார நிலையங்களில் இட ஒதுக்கீடு, மாநகர சபையின் அரசியல் அதிகாரப்பங்கீடு, சுழட்சிமுறையில் சபைமுதல்வர் தெரிவு அல்லது MP கல்முனைக்குடி என்றால் சாய்ந்தமருது / மருதமுனைக்கு மாநகரசபையில் தலைமைத்துவம் எனப்பங்கீடு செய்யப்பட்டிருக்கவேண்டும், மாறாக எல்லாமே கல்முனைக்குடியில் குவிந்தது விரக்திக்கு முக்கிய காரணமாகும்.

சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்ச்சி சபை ஒண்றினைப்பெற்றுக்கொடுப்பதில் எவ்வாறெல்லாம் ஏமாற்றுவது என்பதட்கும், ஒரு ஊர் அரசியல்வாதிகளிடம் எவ்வாறெல்லாம் ஏமாறும் என்பதட்கும் இது ஒரு நல்ல சான்றாகும்.

இதர்க்கான முழுப்பொறுப்பினையும் இம்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட SLMC க்கும், இக்குட்டையை குழப்பிவிட்ட ACMC மற்றும் அதனுடன் சேர்ந்து அங்குபோய் தனி உள்ளூராட்சி சபை தருவோம் என வாக்களித்த உள்ளூராட்சி அமைச்சருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

நேற்று, தம்து கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை மறியல் போராட்டம் செய்வோம் என்று பெரிதாக அறிவித்தார்கள்.

அடுத்த நாள், அரசியல்வாதிகள் மாதிரி மீடியாக்களுக்கு அறிக்கைகளை கொடுத்துவிட்டு வீடு போய் சேர்ந்துவிட்டார்கள்.

சுப்பர் போராட்டம்

Dear Brother Mohamed Janie, for me Islamic political and this day and age political are two different. thank you for the comments.

We are doing protest with unity and diversity.not to extream.this is good decision

அதாவுல்லா அன்று எடுத்த முடிவுக்கு ஒரு சிறு சைகை காட்டியிருந்தாலும் மகிந்தையைக்கொண்டு காரியம் முடித்திருப்பார். அடுத்த தேர்தல் வரை பொறுமை செய்வோம். அதிரடியாக அனைத்தும் நடக்கும். இன்ஷாஅல்லாஹ்.

** சமூகம் சார்ந்து சிந்திக்காமல் பிரதேசம் சார்ந்து சிந்திக்கும் ஒரு ஜாஹிலிய்யத் கூட்டமாகவே இதை நாம் பார்க்கிறோம்.

** கலந்துரையாடல் மூலம் மிகவும் இலகுவாக தீர்க்க வேண்டிய இவ்விடயத்தை... ஒற்றுமையாக இருந்த மக்களை பகைவர்களாக மாற்றப் பார்க்கிறார்கள்.

** இந்த பிரதேசத்தில் நிறைய படித்தவர்களும் ( professionals ) சமூக ஆர்வலர்களும், உலமாக்களும் இருந்தும் இப்படி பாமர மக்களை வீதிக்கு இறக்கி ஊர்ப்பகையையும், வக்கிரத்தையும், பொறாமையையும் வளர விட்டு வேடிக்கை பார்ப்பது படு கேவலமும், கையாலாகாத தனமுமாகவே பார்க்கிறோம்.

** வங்குரோத்து பிடித்த இந்த பிரதேசத்தின் வரலாறு புரியாத அரசியல் தலைமைகள் ( ஹக்கீம், றிசாத், இவர்களது அடிவருடிகள்.. ஹரீஸ், ஜெமீல், மற்றும் உள்ளூர் இயக்கங்கள் என பலர்... இவர்களது தொழிலே இதுதான்... இந்த மக்களை காட்டியே பணம் சாம்பாதிப்பவர்கள்... இதட்காக பிரதேச வாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.. ) செய்த, செய்து கொண்டிருக்கின்ற ஒரு பித்தலாட்டத்தினால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தையே இந்த பிரச்சினை.

** தனி மனித சுதந்திரத்தை, உரிமையை எப்படி இந்த ஊர் வாதம் காட்டுபடுத்துகிறது என்பதை இந்த தீர்மானங்களே சாட்சி பகிர்கிறது.

** இவர்களுக்கும் பொது பல சேனாவுக்கும் என்ன வித்தியாசம். ஓன்று ஊர்வாதம் மற்றயது சிங்கள வாதம்.

** தற்போது இருப்பது போல் இருப்பது தான் இப்பிரதேசத்தின் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியில் மிகப்பெரும் பலம். இந்த பலம் இலங்கை முஸ்லிம்களுக்கே ஒரு பலம். அப்படி இல்லை என்றால் இது நான்கு பிரதேச சபைகளாக பிரிக்கப்பட வேண்டும்..... இந்த இரண்டில் ஒன்றுதான் சுமுகமாக செய்து கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வாக அமையும் என்பது எமது கணிப்பாகும்.

Post a Comment