Header Ads



கட்டாரினால் முதல்முறையாக, இலங்கைக்கு வழங்கப்படும் வெகுமதி

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் கட்டார் அரசாங்க அதிகாரிகள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விரும்பும் ஓர் இடத்தில் இந்த நகரத்தை அமைக்க முடியும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கட்டார் அரசாங்கத்தினால் முதல் முறையாக இலங்கைக்கே இவ்வாறான ஓர் நகரம் வழங்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நகரத்தை அமைப்பதற்கு இடமொன்றை ஒதுக்கித் தருமாறு கட்டார் அதிகாரிகள் கோரியுள்ளனர்.

3 comments:

  1. அரசாங்கம் எங்கே விரும்புதோ, அந்த இடத்தில் கட்டார் நகரம் அமைக்கும் - ஜனாதிபதி.

    சிங்களவர்கள் எங்கே அதிகமாக வாழ்கிறார்களோ, அங்கே கட்டார் அரசாங்கம், நகரத்தை அமைப்பார்கள் - பௌத்த விகாரைகள் உட்பட.

    சிங்கள பௌத்த காடையர் கூட்டம், ஜிந்தோட்டை மக்களுக்கு நரகலோகத்தைக் காட்டிய விதம், கட்டார் அமீருக்கு தெரியாது போல.

    கட்டார் அமீர் அவர்கள் ஒரு தமிழராக இருந்தால், இந்நேரம் இலங்கையில் நகரம் அமைப்பது, ரத்து செய்யப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  2. His excellency MS, can you build a peace city in the country with the support of Qatar?

    ReplyDelete
  3. இவர் ஜனதிபதியாக இருப்பதற்கு தகுதியற்றவர். ஆளுமை அற்ற கையால்லாகாத சிங்கம்.

    ReplyDelete

Powered by Blogger.