November 26, 2017

மாறப் போகுது கொழும்பு - பாராளுமன்றத்தில் அறிவிப்பு


தெஹி­வளை, கல்­கிஸ்ஸ உட்­பட கொழும்பு நக­ரங்­களில் வாகன நெரிசல் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாகும் வகை­யி­லான எந்­த­வொரு வீட­மைப்பு திட்­டங்­க­ளுக்கும் கட்­டட நிர்­மா­ணத்­திற்கும் இனிமேல் அனு­மதி வழங்­கப்­போ­வ­தில்லை என மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

அத்­துடன் கொழும்பு கோட்­டையில் இருந்து பய­ணிக்கும் வகை­யி­லான இலகு ரயில் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தினை அடுத்த வருடம் ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். மேலும் கோட்­டையில் இருந்து பொரளை வரை­யான அதி­வேக பஸ்­சே­வை­யையும் விரைவில் ஆரம்­பிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வு­த்திட்­டத்தில் வெளி­வி­வ­கார, போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவை, அபி­வி­ருத்தி பணிப்­பொ­றுப்பு அமைச்­சு­க­ளுக்­கான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் 60 இலட்சம் வாக­னங்கள் உள்­ளன. இவற்றில் 4 மில்­லியன் வாக­னங்கள் செயற்­பாட்டில் உள்­ளன. இதில் 70 வீத­மா­னவை முச்­சக்­கர வண்­டியும் துவி­ச்சக்­கர வண்­டி­யு­மாகும். 10 இலட்­சத்­துக்கும் குறை­வா­கவே ஏனைய வாகன வகைகள் உள்­ளன. இதன்­படி போக்­கு­வ­ரத்து துறைக்கே அரசின் மூல­தன செலவில் பெருந்­தொ­கை­யா­ன­வற்றை செல­வி­டு­கின்றோம். இதன்­படி 300பில்­லியன் ரூபா பெற்றோல் இறக்­கு­ம­திக்கு செல­வி­டப்­ப­டு­கின்­றது. மேலும் வாக­னங்கள் மற்றும் வாகன இயந்­தி­ரங்­க­ளுக்கு 200 பில்­லியன் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றன. எனவே வாக­னங்கள் தொடர்ந்து அதி­க­ரித்தால் வாகன நெரி­ச­லுக்கு வழி­வ­குப்­ப­துடன் பொரு­ளா­தா­ரத்தை கடு­மை­யாக பாதிக்கும்.

இதன்­படி பொது போக்­கு­வ­ரத்தை பலப்­ப­டுத்த வேண்டும். நாட்டில் 50 சத­வீ­த­மா­ன­வர்கள் பொது போக்­கு­வ­ரத்தில் பய­ணிக்­கின்­றனர். எனினும் தற்­போ­தைக்கு 25 ஆயிரம் பஸ் வண்­டி­களே களத்தில் உள்­ளன. ஆனால் ஏனைய 50 வீதத்­தினர் வேறு வாக­னங்­களில் பய­ணிக்­கின்­றனர். இதன்­படி கணக்­கிட்டு பார்க்கும் போது ஒரு பஸ் வண்டி சேவையில் இருந்து வில­கினால் பய­ணிகள் பய­ணிப்­ப­தற்கு 140 வாக­னங்கள் தேவை­யாக உள்­ளன. மேலும் டாடா பஸ்கள் எமக்கு இனிமேல் பிர­யோசன தர முடி­யாது. ஆகையால் சொகுசு பஸ் வண்­டி­களை களத்­திற்கு இறக்க வேண்டும்.

அத்­துடன் ஆங்­கி­லேயர் காலத்தின் பின்னர் ரயில் பாதை கட்­ட­மைப்பில் எந்­த­வொரு மாற்­றமும் வர­வில்லை. இந்­நி­லையில் எமது அர­சாங்­கத்­தினால் கொழும்பு கோட்­டையில் இருந்து பய­ணிக்கும் வகை­யி­லான இலகு ரயில் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தினை அடுத்த வருடம் ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். மேலும் கோட்­டையில் இருந்து பொரளை வரை­யான அதி­வேக பஸ்­சே­வை­யையும் விரைவில் ஆரம்­பிக்­க­வுள்ளோம். மேலும் மின்­சார ரயில் சேவையயையும் ஆரம்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

இதே­வேளை தெஹி­வளை, கல்­கிஸ்ஸ உட்­பட கொழும்பு நக­ரங்­களில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாகும் வகையிலான எந்தவொரு வீடமைப்பு திட்டங்களுக்கும் கட்டட நிர்மாணத்திற்கும் இனிமேல் அனுமதி வழங்கப்போவதில்லை. மேலும் நாடளாவிய ரீதியில் அரச காணிகளில் 10 வீதம் நெடுஞ்சாலை அபிவிருத்திக்கு பிரயோகம் செய்யப்படுகின்றது. இது பாதிப்பான செயற்பாடாகும் என்றார்.

3 கருத்துரைகள்:

தெஹிவளை வில்லியம் சந்தி தொடக்கம் இரத்மலானை மலிபன் சந்தி வரை பாதை பள்களமும்குழியுமாக கரடுமுரடாக மாற்றானுக்கு பாரபட்சம் காட்டினால் போல் திட்டமிட்டு பலவருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பது இந்த வாகன நெரிசலுக்கு முக்கிய காரணம் என்பதை ஏன் எவரும் கண்டுகொள்வதில்லை.

முழு நாடும் உருப்படியாகும் பாட்டலி என்ற பெருச்சாலி தொலைந்தீல்

Ivan oru recism.hamuduru muttaal

Post a Comment