November 21, 2017

ஞானசாரர் முன்னோடியாக இருந்தாரா..?

-விஸ்வாமித்ரா-

ஞானசேரர் அட்டூழியத்தில் ஈடுபட்டபோது, மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்கள் மௌனமாக இருந்தன. துரதிருஷ்டவசமாக எங்களது பௌதத மதகுருக்ள் இன்னமும் கடந்த காலத்திலேயே வாழ்கின்றனர்.

ஞானசேரரினால், ஒரு தொடரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், முரட்டுத்தனமான தாக்குதல்கள் மற்றும் தனது அடிப்படை வழக்குமொழி மூலமாக மோசமான கெட்டவார்த்தைகளை உச்சரித்தல் போன்ற செய்கைகளினால் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.

-பாராளுமன்ற வரலாற்றிலேயே 18வது சட்டத்திருத்தத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரை மாபெரும் பங்களிப்புகளில் ஒன்று, அது ஒரு விசேடமான இடத்தைப் பெறத் தகுதியானது. -அரசியலானது இன மற்றும் மத நிழல்களின் குழியில் வீழ்ந்திருக்கும்போது, ஆட்சியும் கூட அதே இரத்தக்களறியான சேற்றுக் குழிகளில் சிக்கியிருக்கும்.

-“ உண்மையில் திறமையான ஒரு சர்வாதிகார ஆட்சியானது தனது எல்லாச் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களையும் மற்றும் அவர்களது முகாமையாளர்களான இராணுவத்தையும் கொண்டு ஒரு அடிமைகளான மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது, அந்த அடிமைகளைக் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை ஏனென்றால் அவர்கள் தங்கள் கடமைகளை நேசிக்கிறார்கள்”. - அல்டோஸ் ஹ_க்ஸ்லே, “துணிவான புது உலகம்”

கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு, ராஜபக்ஸ வம்சத்தினர் ஒரு விரைவான முயற்சியை மேற்கொண்டார்கள். அது அவர்களையே திருப்பித் தாக்கியது. காவி உடை அணிந்து ஒரு தெருச் சண்டியனை ஒத்தவரான கலகொட அத்தே ஞானசேரர்தனது தற்பெருமையைக் காட்டுவதற்கு காரணத்தை தேடி அலைபவர் மற்றும் போராசையான வாழ்க்கையை துறந்த ஒரு துறவியை சிம்மாசனத்தில் அமர்த்தப்போவதாக அவர்களிடம் சபதம் செய்திருந்தார். அவரது சாதியானது மல்வத்த பீடத்தின் சியாம் நிக்காயாவின் கீழ் திருநிலைப்படுத்தப் படுவதற்கு நியாயமான காரணியாக இருந்ததினால், ஆளுமை சக்தி கொண்ட இந்த மனிதர் நிழலான அம்சங்களைக் கொண்டிருந்தார். இதனால் தொடர்ச்சியான காவி உடை தரித்தவர்களின் எதிர்ப்பு பேரணிகள், முரட்டுத்தனமான தாக்குதல்கள் மற்றும் தனது அடிப்படை வழக்குமொழி மூலமாக மோசமான கெட்டவார்த்தைகளை உச்சரித்தல் போன்ற செய்கைகளினால் ஊடகங்களில் தனதுஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தார், அத்துடன் தங்களை அடையாளம் காட்டுவதற்கான ஒரு காரணத்தை இதன் மூலமாக கண்டுகொண்ட பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் மனோபாவத்திலும் அவர் இடம் பிடித்துக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி அதற்கான காரணத்தை வழங்கியது. அப்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்ஸ வம்சத்தினரது வளரும் வெற்றிக்களிப்புடன் இணைந்த அரசியல் கலாச்சாரத்தை வேண்டுமென்றே தகர்க்கும் செயல், அதிகரித்துவரும் துருவமுனைப் படுத்தப்பட்ட சமூக இன இயல்பு நிலைக்கு ஊக்கம் அளித்தது. அவர்களது பிரச்சார இயந்திரம் முழுச் சக்தியுடன் இயக்கப்பட்டது மற்றும் அவர்களை எதிர்க்கும் ஒவ்வொருவரும் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். நாட்டுப்பற்றில்லாதவர் அல்லது துரோகத்தனமானவர் என்கிற தோற்றம் அல்லது சித்தரிப்பு இராணுவ அதிகாரிகளை அல்லது இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களை சீரழிக்க முடியும். இதுதான் சரத் பொன்சேகாவுக்கும் நடந்தது.

பொதுபலசேனா (பிபிஎஸ்) போராளிகள், அடிப்படைவாத சிங்கள பௌத்த செயற்பாட்டு குழுவினர் ஆவர், தீவிர இனவாதிகள் மற்றும் மதரீதியாக மகாவம்சம் மற்றும் அதன் பண்டைக்கால அரசர்களின் கீர்த்திமிக்க விளக்கங்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்களின் ஆதரவைத்திரட்டி அதன் மூலமாக  வாக்களிக்கும் மக்களில் கணிசமான தொகையினரை அணிதிரட்டி இராணுவ நடவடிக்கை முடிவடைந்த உடனேயே அவர்களை தெருக்களில் இறக்கியது. அவர்களின் யுத்தக் கூக்குரல் பரந்த அடிப்படையிலான செய்தி என எண்ணிக்கையில் காணப்பட்டது. சமீபத்தை எண்ணிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா மக்கள்தொகை புள்ளிவிபரம்  2017, இன விகிதாசாரத்தில்

சிங்களவர்கள்          74.9%
ஸ்ரீலங்காத் தமிழர்கள்     11.2%
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள்     9.2%
இந்தியத் தமிழர்கள்      4.2%
ஏனையவர்கள்            0.5%   (2012 மதிப்பீடு)
மத விகிதாசாரப்படி

பௌத்தர் (உத்தியோகபூர்வ)   70.2%

இந்துக்கள்                12.6%
முஸ்லிம்கள்                9.7%
றோமன் கத்தோலிக்கர்         6.1%
ஏனைய கிறீஸ்தவர்கள்         1.3%
மற்றவர்கள்                  0.05%
(ஆதாரம்: சி.ஐ.ஏ வேல்ட் பக்ட் புக்)

ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதுதான் நோக்கம் என்றால், மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் துணைக் கட்சிகளைச்; சேர்ந்த மேதாவிகள் பெரும்பான்மையான வாக்களிக்கும் மக்களின் உண்மையான மற்றும் உறுதியான பிடிப்பை மேற்கொண்டாலே போதும், சிறுபான்மையினரை முற்றாக புறக்கணித்துவிட முடியும் என்கிற கோட்பாட்டை உருவாக்கி, பெருமளவான பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகளைச் சுற்றி ஒரு தடுப்புச்சுவரை எழுப்பி உறுதி செய்து கொண்டார்கள். இவை அனைத்தும் 2009ல் மகிந்த ராஜபக்ஸ சரத் பொன்சேகாவை தோற்கடித்த உடனேயே நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2010ல் பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வெற்றியினால் அவர்கள் மேலும் ஊக்கம் பெற்று இதன் அடிப்படையிலான உள்ளுணர்வு சார்ந்த வாதத்தை வலியுறுத்தினார்கள், அதாவது எதிர்காலத்தில் தேர்தல் வெற்றிகளைப் பெறுவதற்கு உறுதியானதும் மற்றும் திடமானதுமான  பௌத்த சிங்கள வாக்காளர் குழுவினரின் வாக்குகள் மட்டும் போதுமானது என்பதுதான் அவர்களத வாதமாக இருந்தது. பெரும்பான்மை பௌத்த சிங்களவர் அடிப்படையான கோட்பாட்டின் நம்பிக்கைதான்  18வதுதிருத்தத்தை அவர்கள் அறிமுகப்படுத்துவதின் பிரதான அம்சமாக இருந்தது, அந்த திருத்தம் ஜனாதிபதியின் பதவிக்கான தேர்தல் கால வரம்பை அழித்துவிட்டது. இருப்பினும் எங்கள் அரசியலமைப்பின் மீதான இந்த திருத்தம் மகிந்த ராஜபக்ஸவுக்கும் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் ஸ்ரீலங்காமீதான தங்கள் ஆட்சியை நிலைத்திருக்கச் செய்வதற்கு சட்டபூர்வமான ஒரு அடித்தளத்தை கேள்விக்கு இடமின்றி வழங்கிவிட்டது. 18வது திருத்தத்தின் எளிதான பாதையில் ஏராளமான மாறுபட்ட நெறிமுறை சார்ந்த தார்மீக வாதங்கள் பலவற்றையும் அது உள்ளடக்கியிருந்தது.

பாராளுமன்ற வரலாற்றிலேயே 18வது சட்டத்திருத்தத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரை மாபெரும் பங்களிப்புகளில் ஒன்று, அது ஒரு விசேடமான இடத்தைப் பெறத் தகுதியானது. அரசாங்க தரப்பு வரிசையில் இருந்து எழுந்த குழப்பமுண்டாக்கும் அருவருப்பான ஒலிகள் மற்றும் கேலிப் பேச்சுகளுக்கு மத்தியில் சுமந்திரன் மிகச் சிறந்த ஒரு உரையை வழங்கியிருந்தார். அந்த நேரத்தில் முன்னணியில் திகழ்ந்த ஒரு முன்னணிக் கல்வியாளரினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்: “ஒரு அவசரமான மசோதா மூலமாக அரசியலமைப்பை திருத்தம் செய்வதை தெரிவு செய்ததின் வழியாக சீரமைப்புக்கான முழு நடவடிக்கையுமே துரிதப்படுத்தப்பட்டது, அல்லது தவறாக வழிநடத்தப்பட்டது. எந்த வகையான பொதுமக்களின் விவாதங்களுக்கு மாத்திரமன்றி பொதுமக்களின்ஆலோசனைகளுக்குக் கூட இடம் அளிக்கப்படவில்லை. ஒரு அரசியலமைப்பின் கீழ் அவற்றின் வெளிப்படைத்தன்மை “மக்களின் இறைமையை” அங்கீகரிக்கிறது, விசேடமாக இந்த நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்குரிய அவசியம் பற்றி ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் எதுவும் கூறப்படவிவ்வை அதனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்ல. உண்மையில் இந்த முழு நடவடிக்கையிலும் உள்ள கவலை தரும் அம்சம் என்னவென்றால் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய அரச பதவிகளுக்கான ஆர்வம் குறைவாக உள்ளது அதுமட்டுமன்றி இத்தகைய அவசர சீர்திருத்தத்துக்கு தேவையான ஒருமித்த கருத்தை பொதுமக்களிடையே உருவாக்க வேண்டும்”.
இந்த மசோதாவுக்கு அனுசரணை வழங்க மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் காட்டப்பட்ட வழக்கத்துக்கு மாறான அவசரம், இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கான தவறான நம்பிக்கைக்கான தெளிவான அடையாளமாக இருந்தது. இந்த நேரத்தில்தான் பௌத்தத்தின் பாதுகாவலர் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள்  இதைத் தகுந்த சந்தர்ப்பமாக கருதி எழுச்சிபெற்று பொதுமக்களின் பக்கம் நின்றிருக்க வேண்டும். மாறாக பெயர்பெற்ற குண்டர்களான பொது பல சேனாவை அவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஞ}னசார முழு முரட்டுத்தனத்தில் வலம் வந்தபோது, சியாம் நிக்காயா, மல்வத்த மற்றும் அஸ்கிரிய ஆகிய இரண்டு பீடங்களும் தெளிவான மௌனத்தைக் கடைப்பிடித்தன. அவைகள் அவரைக் கண்டிக்க மறுத்ததுடன் ஒரு விவேகமான உணர்வுடன் பொதுமக்கள் மற்றும் தனியார் மீதான ஞ}னசாரவின் மோசமானதும் ஆபாசமானதுமான நடத்தையையும் பொறுத்துக் கொண்டார்கள். பௌத்த மத துறவிகளும் மற்றும் அதன் படிநிலையும் அவ்வாறான நிலையில் உருவாக்கப் பட்டுள்ளன, அதன் நெகிழ்வுத்தன்மை  துறவிகளின் ஒழுக்கம் போன்ற விடயங்களில் மௌனத்தை கடைப்பிடிப்பதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டது. வேறு வாhத்தைகளில் சொன்னால் போதனைகளின் அடிப்படையான போதனைகள் சவாலாக இருந்தபோதே அமைதியான முறையில் கலகங்கள் ஏற்பட்டன, சங்க சாசனத் தலைவர்கள் 21ம் நூற்றாண்டின் நவீன வகைகளில் ஒன்றாக ஒரு வித்தியாசமான அடிப்படைவாதிகள் பக்கத்துடன் இணைந்தார்கள். இப்போது இந்த அடிப்படைவாத போக்குகள் வெளிப்படையாகவே சியாம் நிக்காயாவின் இரண்டு பீடங்கள் மற்றும் ஏனைய தலைவர்களான ராமன்னா மற்றும் அமரபுர நிக்காயா ஆகியவற்றுடன் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

புதிய அரசியலமைப்பு மாற்றங்களுக்கான விவாத நடவடிக்கைகளில் அவர்களது பிடிவாதமான தலையீடு பழமையானதும் வெற்றுத்தனமான சம்பிரதாயமாக இருப்பதோடு மட்டுமன்றி அரசாங்கத்தின் மதச்சார்பின்மையான விவகாரங்களிலும் ஆபத்தான முறையில் நெருக்கமாக தலையீடு செய்கின்றது. அரசாங்க விவகாரங்களில் மதச்சார்பின்மை என்பதையும் அது மறுக்கப் படுவதையும் ஆழமாகக் குறிப்பிடப்படுகிறது, விசேடமாக ஸ்ரீலங்கா போன்ற ஜனநாயக பல்லின சமூகத்தின் பின்னணியில், பண்டைய இலங்கையின் ராஜா,ராணி ஆட்சியில் பொருத்தமாக இருந்த சர்வாதிகார முடியாட்சியின் பழக்க வழக்கங்கள் இப்போது பொருத்தமற்றவையாக உள்ளன. மனித வரலாற்றிலேயே அறியப்பட்ட முதன்முதலான சமூக விஞ்ஞ}னி என விவாதிக்கப்படும் சாணக்கியாவின் கூற்றுப்படி அத்தகைய ஆட்சிகளின்போது கூட ஆட்சியாளரின் அடிப்படைச் செயற்பாடு தனது மக்களை அச்சமின்றி இருக்கச் செய்வதாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னராட்சியின் கட்டமைப்பானது அத்தகைய மதச்சார்பின்மை மற்றும் நோக்க உணர்வு மற்றும் ஜனநாயக உறுப்பின் கருத்தொற்றுமை போன்ற முறைமையைக் கொண்ட அரசாங்கமாக கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளது.

நாங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் என்பனவற்றை 1948ல் ஐநா பொதுச்சபையின் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி பாதுகாக்கவேண்டிய கடமை நமக்குள்ளது. பழமையான மரபுகளைக் கொண்ட உள்ளுணர்வுடன் கூடிய பழக்கவழங்களை நாம் தூண்டக்கூடாது. இது மன்னராட்சிக்குத்தான் மிகவும் பொருத்தமானதும் மற்றும் பிரேயோகிக்கத் தக்கதும் ஆகும், சமூக இணைப்பு மற்றும் நாகரீகமான வாழ்க்கை மற்றும் சிந்தனை என்பனவற்றை; ஏற்றுக்கொள்ளத் தக்க விவேகமான ஆட்சியில் இது நிலவ அனுமதிக்கக் கூடாது. மன்னர்கள் காலத்திலேயெ பௌத்தமதம்  பெருமையான இடத்தைப் பெற்றிருந்தது, அந்த நாட்களில் அது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது மட்டுமன்றி அது இயல்பானதும் கூட. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்றபொழுது நாடு, பிரித்தானிய ராஜ்யத்துடன் தன்னைக் கட்டிப்போட்டிருந்த காலனித்துவ விலங்கிலிருந்து மட்டும் விடுதலை பெறவில்லை, அது பிரபுத்துவ சமூக - பொருளாதார வாழ்க்கை முறையில் இருந்து முழுமையான ஜனநாயக அமைப்புக்கு மாறுவதற்கான பட்டப்படிப்பையும் பெற்றுக் கொண்டது, அதன்படி அரசாங்கங்களை தெரிவு செய்வதையும் மற்றும் நிராகரிப்பதையும் 1931ல் வழங்கப்பட்ட உலகளாவிய வாக்குரிமையின்படி மக்களே தீர்மானித்தார்கள்.

துரதிரஷ்ட வசமாக எங்கள் பௌத்த மதகுருக்கள் இன்னமும் கடந்தகாலத்திலேயே வாழ்கிறார்கள் போலத் தெரிகிறது, அது பிரதானமாக 1972 அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்ட ‘விசேட அந்தஸ்து’ என்கிற நிலையின் உதவியினால். விசேட அந்தஸ்து என்கிற ஓரவஞ்சனையான சிறப்பு விதி அரசியல் அமைப்பில் எழுதப்பட்டு விட்டதால், அதை அகற்றுவது சாத்தியமற்றது, குறிப்பாக ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியில். இந்த நம்பவைக்கும் வாதங்கள் யாவும் சராசரி கிராமப்புற வாக்காளரின் அறிவுக்கு அப்பாற்பட்டதாகும். அரசாங்கத்தின் இத்தகைய அதிநவீன அரசியலமைப்பு விவகாரங்களைச் ஜீரணிக்கும் அளவுக்கு அவர்கள் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை என்பது மட்டுமன்றி இத்தகைய பொருட் பெறமதியற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு நேரமும் இல்லை. தவிரவும் பௌத்த தர்மத்தின்மீது அவர்கள் காட்டும் விசுவாசம் கொழும்பில் வாழும் பண்டிதர்களால் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது மத விசுவாசம் தத்துவரீதியாக ஆழமானதாகவோ அல்லது தந்திரமான மேலோட்டமானதாகவோ இருந்தாலும் கூட மண்ணின்மீதும் மற்றும் இனத்தின்மீதும் அவர்களுக்குள்ள விசுவாசம் எவ்வாறாயினும் ஆழ வேரூன்றி அசைக்க முடியாததாக உள்ளது.

கலகொடஅத்தே ஞ}னசாரவினால் அச்சமின்றி ஆரம்பிக்கப்பட்ட செயலானது இப்போது பௌத்த குருத்துவத்தின் உயர்மட்ட உயர் பிக்குகளால் மெருகூட்டப்பட்டு வருகிறது. உள்ளுர் வியாபாரங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டபூர்வமான தமிழர் உரிமைகள் என்பனவற்றுக்கு எதிரான அழுகை மற்றும் கூக்குரல்களின் விளைவு  ஸ்ரீலங்கா தமிழிசத்துக்குச் சார்பான ஒரு செயற்கைகோளாக மாறி வருகிறது என்பதுதான் இப்போது பெரும்பான்மையினரின் மிகவும் நியாயமான ஒரு மனக்குறையாக  உள்ளது. அரசியலானது இன மற்றும் மத நிழல்களின் குழியில் வீழ்ந்திருக்கும்போது, ஆட்சியும் கூட அதே இரத்தக்களறியான சேற்றுக் குழிகளில் சிக்கியிருக்கும். அதனால்தான் இன நல்லிணக்கம் மற்றும் மத சகிப்புத்தன்மை என்பனவற்றில் சமீபத்தைய எதிர்காலத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற அளவுக்கு எந்தவொரு முன்னேற்றமும் தென்படவில்லை.

 தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

1 கருத்துரைகள்:

B B S ஐ இயக்குவது தமிழர் அமைப்பு என்றொரு கருத்து முஸ்லீம் மக்களிடம் பரப்ப பட்டுள்ளது .

Post a Comment