Header Ads



சவூதியில் நடந்த, உண்மைச் சம்பவம்

தர்மம் ஓர் மர்மம்

இக்கதையின் யதார்த்தத்தை  அல்லாஹ்வையும் ரஸூலையும் பூரணமாக விசுவாசித்தவரே நம்ப முடியும்.

சவூதியின் தலைநகர் ரியாழ்  நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹரீமலா என்ற பிரதேசத்து நண்பர் ஒருவர் சொன்ன கதை இது.

அதே ஊரில் உள்ள ஒரு பெண் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

 "அல்லாஹ் உங்களையும் என்னையும் இந்த நோயிலிருந்து பாதுகாப்பானாக.!!"

அப்பெண்ணுக்கு பணி செய்வதற்காக இந்தனோசியாவிலிருந்து ஒரு பணிப்பெண் வரவழைக்கப்பட்டிருந்தாள். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அப்பெண் மார்க்கப்பற்றுள்ள நல்லொழக்கமுடைய பெண்ணாகும்.

பணிப்பெண் வந்து சில வாரங்களுக்கு பிறகு இந்த பணிப்பெண் மிக நீண்ட நேரமாக குளியலறையில் தண்ணீரிலே குளிப்பதை முதலாளியான இப்பெண் அவதானித்தாள். 

வழமைக்கு மாற்றமாக அதிக தடவைகள்  இவ்வாறு பணிப்பெண் நடந்து கொள்வதை அவதானித்து வந்தாள்.

ஒரு தடவை இவ்வாறு அதிகநேரம் நீரில் குளிப்பதற்கான காரணத்தை வினவினாள்.

அப்போது அப்பணிப்பெண் கடுமையாக அழ ஆரம்பித்துவிட்டாள். அழுகைக்கான காரணத்தை வினவிய போது அவள் "நான் என்னுடைய மகனை ஈன்றெடுத்து 20 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் இந்தனோசியா வேலைப் பணியகம் என்னை அழைத்து என்னுடைய வேலை வாய்ப்பு நியமனம் பற்றி கூறியது. எனவே நான் எனது குடும்ப நிலையை கருத்திற் கொண்டு இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது உங்களுக்கு பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டு நியமிக்கப்பட்டேன். நான் அழுவதற்கான காரணம் என்னுடைய மார்பகம் தாய்ப்பாலால் நிரம்பிவிட்டது. அதை வெளியேற்றுவதற்காகவே நான் தண்ணீரில் அதிக நேரம் நிற்கின்றேன் என கூறினாள். இந்த விடயத்தை அறிந்த முதாலாளிப் பெண் அவசரமாக அந்த பணிப்பெண் தன் தாய்நாடான இந்தனோசியாவிற்கு பயணம் செய்ய விமான பயணச் சீட்டைப் முன்பதிவு செய்துவிட்டு பணிப்பெண்ணை அழைத்து "இது உன்னுடைய இரண்டு வருடத்திற்கான சம்பளப் பணம். நீ இப்போதே உன்னுடைய மகனிடம் சென்று தாய்ப்பாலூட்டு, அவனை நன்கு கவனித்துக் கொள். இரண்டு வருடங்களின் பின் உன்னால் முடிந்தால் இங்கு வரலாம்" என்று கூறி தன்னுடைய தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தாள்.

அப்பணிப்பெண் சென்றதன் பின்னர் தன்னுடைய இரத்தப் புற்றுநோயை பரிசோதிப்பதற்கான நேரம் வந்தது. வழமையான பரிசோதனையை போன்று இந்த பரிசோதனை அமையவில்லை. வைத்தியர் ஆச்சரியப்படும் அளவிற்கு இரத்தப் புற்றுநோய்க்கான எந்த காரணியும் அப்பெண்ணில் காணவில்லை.  சந்தேகத்தில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனையின் முடிவு ஒன்றாகவே இருந்தது. இந்த ஆபத்தான நோய் குணமடைந்ததைக் கண்ட வைத்தியருக்கு திகைப்பு மாத்திரமே எஞ்சியிருந்தது. பின்னர் அவளை ஸ்கேன் செய்து பார்த்த பின்பும் புற்றுநோய் பூரணமாக குணமடைந்ததை வைத்தியர் உறுதிப்படுத்திக் கொண்டார். 

எனவே இந்த நோய் குணமடைவதற்கு செய்த பரிகாரம் பற்றி வைத்தியர் அப்பெண்ணிடம் வினவினார். அதற்கு அப்பெண் " உங்களுடைய நோயாளிகளை பிறர்க்கு தர்மம் செய்வதைக் கொண்டு நிவாரணமளியுங்கள் " என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை கூறிக்காட்டினாள்.

தமிழாக்கம் : அஷ். எம்.எச்.எம்.ரஷாத் (நளீமி)
தயாரிப்பு: வை.எம்.ஆஷிக்

9 comments:

  1. தர்மம் தலைகாக்கும்.

    ReplyDelete
  2. (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
    (அல்குர்ஆன் : 4:114)

    ReplyDelete
  3. இது கதையா அல்லது சம்பவமா? சம்பவமாயின், இச்சம்பவத்தின் யதார்த்தத்தை அல்லாஹ்வையும், ரஸூலையும் பூரணமாக விசுவாசித்தரே நம்ப முடியும்.

    ReplyDelete
  4. Atteeq abu எங்கே?????
    நல்லதிருந்தால் அடிக்குறிப்பு எழுத மாட்டீர்களே

    ReplyDelete
  5. Atteeq abu எங்கே?????
    நல்லதிருந்தால் அடிக்குறிப்பு எழுத மாட்டீர்களே

    ReplyDelete
  6. Some words on Sadaqa.
    https://www.youtube.com/watch?v=cVZwzZ6G5tA

    ReplyDelete

Powered by Blogger.