Header Ads



வல்லரசுகளால் சுற்றிவளைக்கப்படும் இலங்கை - மைத்திரி சொன்ன இரகசியம்


இலங்கை அரசியல் வரலாற்றில் ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான உறவினை சமகால அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்தித்தேன். அன்றையதினம் இரவு ஒரே மேசையில் ரஷ்ய ஜனாதிபதியுடன் இரவு உணவு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அடுத்த நாள் மாநாடு முடிவடைந்த நிலையில் நாடு திரும்பினேன். அமைச்சரவை கூட்டத்திற்கு செல்வதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தேன். அப்போது ஒரு தூது வந்தது.

புட்டினை சந்தித்து 48 மணி நேரங்கள் நிறைவடைவதற்கு முன்னர் ரஷ்ய தூதுவர் எனது அலுவலகத்தை நோக்கி வேகமாக வந்தார்.

அரச மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக அந்நாட்டு தூதுவர் என்னிடம் குறிப்பிட்டார்.

44 வருடங்களின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பு இதுவாகும்.

ரஷ்யாவின் அழைப்பு இலங்கை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே நான் பார்க்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Edukirathu pichchai, eruwathu pallakku.

    ReplyDelete

Powered by Blogger.