Header Ads



வன்முறையை தடுத்திருக்கலாம், ஜிந்தோட்ட பற்றிய சிறப்பு விசாரணையில் அம்பலம்


 -MFM.Fazeer-

கிந்­தோட்டை வன்­மு­றைகள் இடம்­பெற முன்­ன­ரேயே அவற்றைத் தடுத்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருந்தும் அவை தவ­ற­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எப்.யூ. பெர்­ணான்­டோவின் மேற்­பார்­வையில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன அழ­கக்­கோனின் கட்­டுப்­பாட்டில் இடம்­பெறும் சிறப்பு விசா­ர­ணை­க­ளி­லேயே இது தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி கிந்­தோட்டை வன்­மு­றை­களின் போது சிங்­கள, முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்குச் சொந்­த­மான 81 வீடுகள், 18 வர்த்­தக நிலை­யங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் 6 முச்­சக்­கர வண்­டி­களும், ஒரு லொறியும், வேன் ஒன்றும்,  8 மோட்டார் சைக்­கிள்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­விட நான்கு பள்­ளி­வா­சல்­களும் இதன்­போது தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன் 8 திருட்டுச் சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

இத­னை­விட சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக மோதலைத் தூண்டும் வகை­யி­லான பதி­வு­களை இடு­வோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் கணினிக் குற்றங்கள் பிரிவும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக (ஆரம்ப சம்பவங்கள் உட்பட) 22 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

4 comments:

  1. அனியாயங்கள் நடக்கும்போது எப்போதுமே மௌனித்துப் பார்த்திருக்கின்ற - நம்முடைய ஜனாதிபதி மைத்திரி இருக்கும்வரை இவ்வாறான சம்பவங்கள் - இலங்கையில் நடப்பதென்பது அதகரிக்குமே ஒழிய - அது குறைவடய எந்தவகையிலும் சாத்தியமே இல்லை.

    சிறுபான்மையாகிய நாம் இது பற்றி மிக ஆழமாக சிந்தித்து செயல்படவேன்டிய கட்டாய தருணம் இது.

    மாற்றீடாக மகிந்தவை சிந்திப்பது ஒன்றும் தவறில்லை - ஒரு சில சாத்தியப்பாடான - அவசியமன - மீன்டும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான - நிபந்தனைகளுடன்.

    ReplyDelete
  2. Mr. Mahithriya also behind Aluthgama And Ginthota incident.... Now its very clear and it will come out very soon...


    ReplyDelete
  3. Mohamed Raffi இது ஒருவேளை மஹிந்தவின் ஏற்பாட்டில் நடந்திருந்தால்??

    ReplyDelete

Powered by Blogger.