Header Ads



ரஷ்யாவில் ஆசாத், புதினுடன் பேச்சுவார்த்தை

சிரியாவில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக வன்முறையாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது. அரசுக்கு எதிரான போரில் பொதுமக்களில் 4 லட்சத்திற்கும் கூடுதலானோர் பலியாகினர்.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் சிரியாவுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக விளாடிமிர் புதின், ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரி மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோருக்கு ஆசாத் நன்றி தெரிவித்து கொண்டார்.

2 comments:

  1. Two big evails togheather planing next war!

    ReplyDelete
  2. “வன்முறையாளர்கள் அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்”????
    காலம் மாரி போச்சு, அவர்கள் சுதந்திரப்போராளிகள் வன்முறையாளர்கள் அல்ல,
    ஷீயா காபிர்களுக்கெதிராக போராடி வருகிறார்கள் என்பதை ஜப்னா முஸ்லிம் மறந்து விட வேண்டாம்!!

    ReplyDelete

Powered by Blogger.