Header Ads



மியான்மரில் நடைபெறுவது, இன அழிப்பு: அமெரிக்கா அறிவிப்பு

மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் இன அழிப்பே என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கூறியதாவது:

பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலும், ராணுவ நடவடிக்கைகளைத் தூண்டு வகையிலும் யாராவது நடந்துகொண்டிருந்தால்கூட, இவ்வளவு கொடூரமான வன்முறைகளை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்த முடியாது.

ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவருக்கு எதிராக மியான்மர் ராணுவமும், உள்ளூர் குழுக்களும் மேற்கொள்ளும் குற்றங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார் அவர்.

மியான்மர் வன்முறை இன அழிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு எதிரான மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைமை டிரம்ப் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, அண்மை ஆண்டுகளாகத்தான் அந்த நாடு மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தியது.


1 comment:

  1. மியன்மாரில் நடந்தது இன அழிப்பு அமேரிக்கா செய்தது செய்து கொண்டிருப்பது இன வளர்ச்சி

    ReplyDelete

Powered by Blogger.