Header Ads



இலங்கை வீதிகளில் முதல் தடவையாக, ஆணுறை இயந்திரம்

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்)

இலங்­கை­யில ஆணு­றை­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக முதல் தட­வை­யாக தானி­யங்கி இயந்­தி­ர­மொன்று வீதி ஓரத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக இலங்கை குடும்பத் திட்­ட­மிடல் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

சில ஆண்­களும் பெண்­களும் பாம­ஸி­களில் சென்று ஆணு­றை­களை பெற்றுக் கொள்­வதை அசௌ­க­ரி­ய­மாக கருதும் கார­ணத்­தினால் இவ்­வாறு ஆணு­றை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆணுறை விநி­யோக தானி­யங்கி இயந்­திரம் (condom vending machine) பொருத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­மூலம் பெரும்­பாலும் இலங்­கையில் ஏற்­ப­டக்­கூ­டிய பார­தூ­ர­மான பாலியல் நோய்கள், கருக்­க­லைப்­புகள், அநா­வ­சிய கருத்­த­ரிப்­புகள் என்­பன குறையக் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கொழும்பு 7, புலர்ஸ் ஒழுங்­கையில் (டொரிங்டன்) அமைந்­துள்ள இலங்கை குடும்பத் திட்­ட­மிடல் சங்­கத்­துக்கு அண்­மையில் இந்த தானி­யங்கி ஆணுறை இயந்­திரம் பொருத்­தப்­பட்­டுள்­ள­துடன், மேலும் சில இடங்­க­ளிலும் இவ்­வா­றான இயந்­தி­ரங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கைத்­தொ­லை­பேசி இலக்­கத்­தினை குறித்த இயந்­தி­ரத்தில் உள்­ளீடு செய்­ததன் பின்னர், தாம் உள்­ளீடு செய்த இலக்­கத்­துக்கு குறுந்­த­கவல் மூல­மாக PIN இலக்­க­மொன்று கிடைக்­க­பெறும். அந்த இலக்கத்தை இயந்­தி­ரத்தில் உள்­ளீடு செய்­வதன் மூல­மாக ஆணு­றை­களைப் பெற்றுக் கொள்­ள­ மு­டியும்.

இதன்­மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­படும் ஆணுறை பைக்­கற்­றொன்­றுக்­காக 50 ரூபா அற­வி­டப்­படும் எனவும் இதற்­கான கட்­டணம் மாதாந்த தொலை­பேசி கட்­ட­ணப்­பட்­டி­ய­லுடன் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும்.

எனினும் தொலை­பேசி பட்­டி­யலில் கட்­டணம் மாத்­திரம் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் என்றும் அது எதற்­காக அற­வி­டப்­பட்­டது என்ற விபரம் குறிப்­பி­டப்­ப­ட­மாட்­டாது எனவும் இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வசதி தற்போது ஒரேயொரு தனியார் தொலைபேசி வலையமைப்புக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அச்சங் கம் மேலும் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. வயது பாகுபாடின்றி யாரும் விபச்சாரத்தில் ஈடுபட முடியும்.அத்துடன் பார்மசி ஒன்றிற்கு போனால் ஏன் எதற்கு என்று எல்லோருக்கும் தெரியாது.இந்த இயந்திரத்திற்கு பக்கத்தில் நின்றாலே போதும் படத்துடன் சமூகவளைத்தளத்தில் ஆசாமி வந்துவிடுவார்.

    ReplyDelete

Powered by Blogger.