November 16, 2017

வாள்வெட்டு மோதல்களை கட்டுப்படுத்த, களத்தில் குதித்தார் இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை  கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக  கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார்.

இன்றைய தினம் -16- யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று 1062/16 என்ற கைக்குண்டு வாள்வெட்டு தொடர்பான வழக்கின் பிணை விண்ணப்பமானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இப் பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையில் அரச சட்டவாதி, தற்போது யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுமோதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தும், அம் மக்கள் அச்சத்திலும் பொழுதை கழித்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் இக் கைக்குண்டு வைத்திருந்த மற்றும் வாள்வெட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு பிணை வழங்குவது சமூகத்தின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாகிவிடும் என குறிப்பிட்டு அப் பிணை மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி அப் பிணை மனுவை நிராகரித்து அதனை ஒத்திவைத்ததுடன் வாள்வெட்டு கலாச்சாரத்தை உடன் கட்டுபடுத்துமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்வாறான சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் நீதிபதியின் உத்தரவுக்கமைய மேற்படி விஷேட கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இவ் விஷேட கூட்டமானது இன்று காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றிருந்தது. இதில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பேனார்ன்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பேனார்ன்டோ, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ண, பொலிஸ் அத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ்.தலமை பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் ஹெமாவிதாரன ஆகியோர் கலந்துகொண்டிருந்ததனர்.

இக் இச் சந்திப்பின் போதே நீதிபதி மேற்படி அவசர உத்தரவை பிறப்பித்திருந்தார்.

11 கருத்துரைகள்:

ஐயா!
உங்களது நல்ல முயற்சிக்கு தக்க பலன் கிடைக்க வாழ்த்துகிறோம். அத்தோடு, திறந்த வீடுகளுக்குள் நாய் நுழைவது போன்று முஸ்லிம்களின் தளத்தில் மூக்கை நுழைந்து கண்டகண்ட விதமாக இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் பதிவிடும் சந்த்ரபால், அந்தோனி ஆகியோரையும் பிடித்து உள்ளேபோட உத்தரவிடுவதும் தங்களது களங்கமற்ற சேவைக்கு சான்றாக அமையும்.

நீதிபதி அவர்களே,

யாழில் அரங்கேறும் வாள்வெட்டுக்கள், இந்திய 'ரோ' வின் திருவிளையாடல்கள்.

இது உங்களுக்கும் தெரியும்.

Police officer if don´t do their duty properly then better resign and go home.

Lafir அண்ணே இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?
இந்த தளத்தின் பெயர் என்ன? Jaffna Muslim
அப்படியென்றால் முஸலிம்களும், யாழ்ப்பாணத்தவருக்கும் பொதுவானது என்று நிணைத்தேன்.

வேறு யார் இப்படி சொன்னாலும் பரவாயில்லை, நீங்கள் சொன்னது நம்ப முடியவில்லை.

இதை விடுங்கள், நம்ம தலைவர் இளைய தளபதியின் மேர்சல் எப்புடி?

யாரடா உமது இளயதளபதி?
யோகியா? மாத்தயாவா? இல்லையே. அவர்களைத்தான் கொன்றுபோட்டயளே!
அடேங்கப்பா!
கருணாவா? நல்ல இளயதளபதி. இவரையே follow up பண்ணுங்கோ. நல்ல வழிகாட்டி.

உங்களின் இந்த காமேடி சுப்பர்.

ஆனால், நீங்க தல fan இல்லை தானே.

@muslim tna,
Really?
அப்படியே, இந்த ஆயுதங்களை supply பண்ணுவதும் ரோவா அல்லது அமேரிக்காவா என்றும் கண்டுபிடித்து சொன்னீர்கள் என்றால் ரொம்ப உதவியாக இருக்கும்.

'ரோ' வின் கையாட்கள், வாள்வெட்டுக்களில் தொடங்கி, இருக்கிறார்கள்.

இது தமிழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

போகப் போக, வாளில் இருந்து AK-47 க்கு பரிணாமம் அடையும்

பரிணாமத்தின் முதிர்ச்சியில், அமேரிக்கா தலையிட்டு முற்றாக அழிக்கும் - முள்ளிவாய்க்கால் போல.

Ini ilangalyul muslingalukuthan alivam, naan solavillai ulaga nadugale soluhinrathu

Really?
அப்போ, மீண்டும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டி அடிக்க படுவார்களா?, ஐயோ பாவம்.. அல்லது, இலங்கையின் ISIS பயங்கரவாதிகள் முஸ்லிம்களுக்காக போராடுவார்களா?
அப்புறம்...?

அப்போ, நீங்கள் சோதிடம் பார்ப்பதில் புலி என்கிறீர்கள்...ஒகே...ஒகே...

...நீங்கள் கை ரேகை சோதிடம், கிளி சோதிடமும் பார்ப்பீர்களா?

Appadei kaleigel matureja ethuva tamil pakutheigel nadanthathu erunthail athanasius par varenthu kaddei varuvenkal

Post a Comment