Header Ads



பட்ஜெட் தோல்வியடையும்

“வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களை இளக்கிக்கொடுத்தல் மற்றும் மக்கள் மீது மிதமிஞ்சிய வரிகளை சுமத்துவதனூடாக அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை, அதிகரிக்க எண்ணியுள்ளது. இதனால், 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு நிச்சயம் தோல்வியடையும்” என்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

'உண்மையில்  இது, மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாத தாராளமயமாக்கல் வரவு-செலவுத்திட்டமாகும்" என்றும் அவர் கூறினார்.

“முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணயநிதியத்திடம்  கடனை பெற பேச்சுவார்த்தை நடத்தியதால், நாணயநிதியம் விதித்த நிபந்தனைகளை மீறி, வரவு-செலவுத்திட்டத்தை தயாரிக்க முடியவில்லை.

“மேற்படி ஒப்பந்தத்துக்கு அமைவாக, அடுத்த 3 வருடங்களுக்கு நாட்டின் செலவீனத்தை சர்வதேச நாணயநிதியமே தீர்மானிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைக்கு அப்பால், நிதியமைச்சால் பயணிக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.