Header Ads



அரபு நாடுகளில், என்ன நடக்கிறது..?


வளைகுடாவில் இன்னொரு யுத்த மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது . கடந்த காலங்களில் சவூதி அரேபியாவை வைத்து காய் நகர்த்தி அதே சவூதியின் பிண்ணனியில் அண்டை நாடுகளை அறுத்து மார்க்கத்தின் பெயருக்குள் நரபலி கொடுத்து  வந்த சியோனிச கூட்டணி இன்னொரு வேட்டைக்கு தயாராகி விட்டது .

முடிக்குரிய மன்னர் முஹம்மது பின் சல்மானை  ஆட்சி பீடம்  ஏற்றுவதற்கு பதிலாக பெறப்பட்ட வாக்குறுதிகளை வட்டியோடு சேர்த்து கொள்முதல் செய்கிற காலம்  இதுதானோ ?

இடம்பெறுகின்ற திடீர் மாற்றங்களை எடுத்து நோக்குகையில் ஆசனத்துக்கு பதிலாக நிறையவே தாரை வார்க்கப்பட்டதாக தெரிகிறது .

மார்க்க அறிஞர்களை கைது செய்தல் , பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்குவது உட்பட அவர்களுக்கு  மேற்கு சார்பான  உரிமைகளை  வழங்குதல் , கட்டாருடன் முண்டிக்கொள்ளுதல் ,

மார்க்கத்தை சீர்திருத்தம் செய்வது, ஈரானை தனிமைப்படுத்தல் , இஸ்ரேலுடனான உறவுகளை மேம்படுத்துதல் ,செல்வந்தர்கள் பலரை ஊழல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்தமை , பல இளவரசர்கள் கொல்லப்பட்டமை போன்றன  ஏற்கனவே குறுக்கு வழியில் ஆசனத்தை கைப்பற்ற அமெரிக்க ஆதரவுக்கு வழங்கப்பட்ட  வாக்குறுதிகளாக இருக்கலாம் .

அதன் வரிசையில் தான் இப்போது லெபனானிய பிரதமர் ஸாத் அல் ஹரீரி இராஜினாமா செய்துள்ளார் .தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தான் இராஜினாமா செய்வதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது .

ஸாத் அல் ஹரீரி சவூதி அரேபிய சார்பான கைப்பொம்மை . ரியாத்தில் இருந்து வருகிற கட்டளைக்கும் பொம்மலாட்டத்துக்கும் ஆடுவதே அவரின் வேலை ..

ஏன் அவர் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் ?

லெபனான் என்பது மூன்று தலைக்கொள்ளி எறும்பின் பிடியில் உள்ள அரிசி மணி போன்றது .ஒரு புறம் ஈரான் மறுபுறம் சவூதி அரேபியா மறுபுறம் இஸ்ரேல் . 

லெபனானை வைத்து பல அரசியல் சித்து விளையாட்டுகள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளன . நீண்ட காலமாக இஸ்ரேலின் கழுக்குப்பார்வையில் இரையாகாமல் இருந்த ஒரே நாடும் லெபனான் தான் . 
அண்டை நாடுகளை பலமாகாமல் பார்த்துக்கொள்ளுவதில் கடந்த காலங்களில்  சியோனிசம் மிக கட்சிதமாக செயற்பட்டு வந்துள்ளது . ஈராக் , சிரியா , யெமன் லிபியா என சியோனிசம் சீரழித்து சின்னாபின்னமாக்கிய  வரலாறு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதல்ல . அதன் அடுத்த  இலக்கை   ஈரானின் பக்கம் திருப்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்தது இஸ்ரேல். ஒபாமா நிர்வாகம் இதற்கு இடம் கொடுக்காதமையால் (ஒபாமா அரசியல் ரீதியாக இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது ) ட்ரம்பின் வருகையோடு இஸ்ரேலின் குள்ளநரித்தனத்துக்கு களம் கிடைத்தது .கூடவே முகம்மது பின் சல்மான் என்கிற எலிப்பொறியும் கிடைத்தது . ஓரே பொறியில் இரு எலிகளை  வீழ்த்துவதற்கு செய்யப்பட முதல்கட்ட சதியே லெபனானிய பிரதமரை இராஜினாமா செய்ய வைத்தமை .

இராஜினாமாவுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரேயே  யேமனில் இருந்து  ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது ஏவுகணை வீசப்பட்டதாக சவூதி அதிகாரிகள் ஈரானை குற்றம் சாட்ட தொடங்கி விட்டார்கள் .  

இஸ்ரேலின்   அடுத்த இலக்கும் அடுத்த கனவும் ட்ரம்பின் ஆட்சி முடியும் முன்னரேயே கை கூட திட்டமிடப்பட்டுள்ளது .

லெபனான் மீதும் ஈரான் மீதும் துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது . 

இன்னொரு யுத்தம் ஏற்படுமாக இருந்தால்  இஸ்ரேலின் பரம எதிரியான ஹிஸ்புல்லாஹ் மீது இம்முறை இஸ்ரேல் மாத்திரமல்ல சவூதியும் அமெரிக்காவும்  கூட்டாக  தாக்குதல் தொடுக்கும்  .ஈரானை வலிந்து யுத்த்துக்குள் இழுத்து விழுத்தும் பொறிமுறை  சாகவாசமாக வகுக்கப்படும்

இன்னொரு வளைகுடா நாட்டின் அழிவின் சிற்பி என்ற பெயரை சவூதி அரேபியா பெற்றுக்கொள்ளும் என்பது மட்டும் உண்மையாகி விட்டது .  அல்லாஹ்வே யாவரையும் அறிந்தவன் 

-அய்யாஷ் 

5 comments:

  1. அரபு நாடுகளில் என்ன நடக்கிறது என்று உங்களை விட அல்லாஹ் நன்கறிந்தவன்.
    ஈரான், ஹிஸ்பு ஷைத்தான் போன்ற இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான “anti virus" களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் அரபுலகில் என்ன நடக்கிறது என்று நன்கு அறிந்து கொள்ளலாம்.
    அந்நாளை அல்லாஹ் மிக விரைவில் கொண்டு வந்து சேர்ப்பானாக.

    ReplyDelete
  2. சவூதி இளவரசர் பிழையான வழியில் போகிறான், என்றாலும் இஹ்வான்கள் ஏன் இன்னும் ஈரானுக்கு முட்டு கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை.முஸ்லிம்களை சின்னாபின்னாக்குவதில் ஈரானின் பங்கும் மிக முக்கியமானது.

    ReplyDelete
  3. Happening , Whatever Allah and His messenger said, so why did you want to write your imagination here, if you like write for any Iran papers they will read it.
    We Don't want your anti Saudi policy here ,

    ReplyDelete
    Replies
    1. ஜப்னா முஸ்லிம் கருத்துச் சுதந்திரத்திற்கு முழு உரிமை தந்திருக்கிறது, நாம் எங்கும் எப்படியும் எழுதுவோம்.
      " Just do your job"

      Delete
  4. கருத்துக்குஞ்சுகள் எல்லாம் சண்டை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவைக்கு தீனி போடும் கிழடுகள் எல்லாம் அமைதி வழி நிற்கும் போது

    ReplyDelete

Powered by Blogger.