Header Ads



முஸ்லிம் காங்கிரஸ், எங்கே சென்றது..? (படங்கள்)


-ஜஹங்கீர்-

இன்று 22.11.2017 புதன்கிழமை கண்டி மாவட்டச் செயலகத்தில் புதிய மாகாணசபைகளுக்கான எல்லைகளை இனம் காண்பது தொடர்பான அமர்வு நடைபெற்றது. இதற்கு எல்லை நிர்ணயக் குழுவினர் வருகை தந்திருந்தனர். 

பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 50 க்கு 50 என்ற ஒழுங்கில் எதிர்காலத்தில் நடைபெற இருக்கின்ற தேர்தல் தொடர்பாக எல்லைகளை இனம் காண்பதற்கான நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல் வாதிகளும் வெகுஜன இயக்கத்தினரும் சமூக ஆர்வலர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

அமைச்சர் ஹலீம், மாகாண சபை உறுப்பினர்களான ஜெய்னுலாப்தீன் (லாபீர் ஹாஜியார்) இதாயத் சத்தாhர், முத்தலிப் ஹாஜியார், ஆகியோர் அங்கு வருகை தந்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மலையக முற்போக்கு முன்னணி என்று பல அரசியல் செயல்பாட்டுக்காரர்கள் அங்கு எல்லை நிர்ணயக் குழுவினர் முன் தங்களது சாட்சிகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் நலன் பேணுவதற்காக கட்சி அமைத்திருப்பதாக சொல்லிக் கொள்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எவரும் வருகை தந்திருக்கவில்லை. உள்ளுராட்சி மன்ற எல்லைகள் நிர்ணயக்கின்ற போது அது பற்றி எந்த நடவடிக்கைகளையும் எடுக்காதவர்கள், இந்த முறையும் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழு முன் எந்த ஆலோசனைகளையோ கோரிக்கைகளையோ முன்வைக்க வில்லை என்பது இன்று கண்டியில் நடந்த இந்த அமர்வில் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் மேடைகளில் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கு தாம் கட்சி அமைத்திருப்பதாக அவர்கள் முழங்குவார்கள்.

சமூக நலனுக்கு கட்சி வைத்திருப்பதாகக் கூறுகின்றவர்கள் தீர்க்கமான இந்த நேரத்தில் ஏன் இப்படிப் பொடுபோக்குடன் நடந்து கொள்கின்றார்கள் என்று புரியவிலை.  கணிசமான முஸ்லிம்கள் வாழ்கின்ற கண்டி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் என்று வைத்திருக்கும் மு.கா. தமது பிரதிநிதித்துவம் தொடர்பில் அக்கரையில்லாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை. 

இது பற்றி நாம் கேள்வி எழுப்பினால் எதிர்கலத்தில் நாம் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்று கூறினாலும் சமூகம் ஆச்சரியப்படத்தேவையில்லை. இது அவர்கள் அரசியல் ஸ்டைல் போலும்.!

 

4 comments:

  1. முஸ்லிம் காங்கிரஸ் போகட்டும். இதில் கூடியிருக்கும் சோனிகளைப் பார்க்கும் போது அங்கு விபரிக்கப்படும் விடயங்களின் பாரதூரத்தை அந்தக்கூட்டம் விளங்கிய விதம் நன்றாகத் தெரிகிறது.இது போன்ற மத்திய மாகாண முஸ்லிம்களின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய கூட்டத்தில் கலந்து கொள்ள நாலு விஷயங்கள் விளங்கக்கூடிய முஸ்லிம் உம்மத்தின் எதிர்காலம் பற்றி சிந்தனை உள்ள முஸ்லிம்களே மத்திய மாகாணத்தில் இல்லையா என எண்ணத் தோன்றுகின்றது.மிகவும் கவலை தரும் விஷயம்.

    ReplyDelete
  2. HE WILL COME TO AKURANA TO DEVIDE THE VOTS IN THE FUTURE.AKURANA PEOPLE WILL LEARN THIS YEAR

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    சில நேரம் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாக ஒருவரே பங்குபற்ற அனுமதித்திருப்பார்களோ?
    ஹக்கீம் அவர்கள் கண்டிமாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் இல்லையே......! மாறாக ஐக்கிய தேசியக்கட்சியின் கலகெதர தொகுதி அமைப்பாளர்தானே.

    கேவலமான அரசியல், ஒரு கட்சியின் தேசிய தலைவர் இன்னொரு கட்சியின் தொகுதி அமைப்பாளர். இதனை புரியாமல் கிழக்கின் பல போராளிகள் இவருக்கு. இதில் பலர் ஹரீஸ். பைசல், மன்சூர், ஹாபீஸ் போன்ற மக்களை ஏமாற்றும் "மாமா" வேலை பார்க்கும் புரோக்கர்கள்.

    தலைமைக்கு வந்து சந்தித்த முதலாவது தேர்தல் முடிவோடு சொன்னானே நான் "வாக்காளர்களை" சந்திக்க வேண்டுமென்று. இதை மறைந்த அஸ்ரப் அவர்கள் நான் "மக்களை" சந்திக்க வேண்டுமென்றார்.

    இவன் அஷ்ரபின் பாசறையில் அல்ல அஷ்ரபின் தொழுவத்தில் கட்டக்கூட தகுதி அற்றவன்.

    ReplyDelete
  4. ஶ்ரீலங்கா மு. கா. தனது பயணத்தில் திசைமாறி செல்லுகின்றமை பலசந்தர்ப்பங்களில் நிருபணமாகியுள்ளது. தூக்கத்தில் இருந்து விழித்தபின் தான் பாதைமாறிசெல்வது உறுதியானால் வாகனத்தை நிறுத்தி சரியான பாதையை அறிந்து சரியாக பயணிக்கவேண்டும்.
    ஆனால் ம. கா. வின் உறுப்பினர்கள் பாதை மாறியதை அறிந்து படிப்படியாக பஸ்ஸைவிட்டு இறங்கிக்கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் சாரதி (தலைவர்) தூங்குவதாக பாசாங்குசெய்துகொண்டு தவறான பாதையிலேயே தொடர்ந்தும் பயணிக்கின்றார். ஏனெனில் மக்களுக்கு நாம் எங்கு செல்கிறோம்? எதற்காகச் செல்கிறோம்? என்பது தெரியாது. அப்படி தெரிந்த யாராவது தட்டிக்கேட்டால் இடையிலேயே இறக்கிவிடப்படுவர். இதையும் மீறி சலசலப்பு ஏற்பட்டால் மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டு ஆதவன் எழுந்துவந்தான் ரெகோடிங்கையும் போட்டுவிட்டால் இந்த மரமண்டச் சனங்கள் அஷ்ரப் கால போதையில் உறங்கிவிடுவார்கள் என்பதையும் சாரதி நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்.
    ஆனால் பயணிகளை மத்திய மலைநாட்டின் மலைமுகட்டிலிருந்து ஒரேயடியாக கொட்டிவிடாமல் இருந்தாலே போதும். தலைவா கிழக்கு மட்டயனுகள் இருக்கும்வரை உமது சவாரிக்கு தடையேயில்லை.

    ReplyDelete

Powered by Blogger.