Header Ads



‘என்னை கைதுசெய்ய வேண்டாம்’ - கோத்தபாய மனு

தம்மை கைது செய்ய வேண்டாம் எனக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த ரிட் மனுவை கோத்தபாய தாக்கல் செய்துள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவு மண்டபத்தை நிர்மாணிக்க அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

90 மில்லியன் ரூபாயை ஒதுக்கி, அந்த நினைவகம் அமைக்கப்பட்டதில் ஊழல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் ஊடாக அவரைக் கைது செய்வதற்கான ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களம் பிறப்பித்திருந்ததாக கடந்தவாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் கோத்தாவை கைது செய்ய அரசாங்கம் தயாராவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, தமது கைதை தடுக்கக்கோரி அவரால் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், பொலிஸ்மா அதிபர், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உள்ளிட்ட சில தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. Don't worry.. our So called president of Good Governance will protect and safeguard you... We selected him as president for protect the political thief... this is what he promised before January 08th 2015.

    ReplyDelete
  2. Judicial authority should have a power to inquire into and take appropriate legal action against the culprit if the public money was really theft. No body including the President intervene into the judicial procedure which is NOT acceptable by the civil society.

    ReplyDelete

Powered by Blogger.