Header Ads



சாய்ந்தமருதில் டென்ஷ்ன், பொலிஸார் தலையீடு

(உமர் அலி)

முஸ்லிம் காங்கிரஸூக்கும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் குழிபறிக்கும் செயற்பாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மு.காவின் பிரதிப் பொருளாளருமான கே.எம்.ஏ.ஜவாத் (றசாக்) கட்சிக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பாவா பாறூக்குடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் சாய்ந்தமருதில் இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு மாட்டிக்கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சாய்ந்தமருது பள்ளிவாசலினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றத்தை வலியுறுத்திய மாட்டு வண்டில் பவணி சாய்ந்தமருது கல்முனை எல்லை வீதியான கடற்கரை வீதியில் வைத்து கல்வீச்சு இடம்பெற்றதனால் அசாதாரண சூழ்நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மு.காவின் பிரதிப் பொருளாளருமான கே.எம்.ஏ.ஜவாத் மற்றும் அவரின் சகோதரர் ஹாதீம் ஆகியோர் கட்சிக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பாவா பாறூக்கின் சகோதரர் முசம்மிலின் வீடு சாய்ந்தமருதில் அமைந்துள்ளது. இங்கு பாவா பாறூக்கின் தலைமையில் இவர்கள் கூடி முஸ்லிம் காங்கிரஸூக்கும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எதிராக வெளியிடவுள்ள புத்தகம் சம்பந்தமாக ஆரயப்பட்டுள்ளது.

இதனிடையே இளைஞர்கள் மாட்டு வண்டில் பவணியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை அடுத்து ஜவாத் மற்றும் அவரின் சகோதரர் ஹாதீம் சாய்ந்தமருது வீடொன்றில் இருப்பதாக தகவல் அறியப்பட்டதும் இளைஞர்களினால் அந்ந வீடு சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு முஸ்லிம் காங்கிரஸூக்கும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எதிராக வெளியிடவுள்ள புத்தகம் கண்டெடுக்கப்பட்டதுடன் அங்கிருந்து ஜவாத்தும் அவரின் சகோதரும் பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். 

இச்சம்பவத்தினால் சாய்நதமருதில் அசாதாரண நிலைமை தோன்றியுள்ளதனால் பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸூக்கும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எதிராக  செயற்படும் ஜவாத்தின் செயற்பாட்டினை கல்முனைத் தொகுதியின் கட்சிப் போராளிகள் கண்டித்துள்ளனர்.

3 comments:

  1. ஜவாத்துக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை சகோ? டைம் பார்த்து நல்லா வெச்சி செய்ரீங்க... உண்மைக்கு புறம்பான செய்தியை ஊர்மக்களுக்கு சொல்லுமுன், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    ReplyDelete
  2. உமர் அலி அவர்களே, நாங்கள் பார்த்த சாய்ந்தமருது ( 1980 இக்கு முதல்: மிகவும் கெளரவமான, கண்ணியமான, கட்டுபாடுள்ள, இறைவனுக்கு பயந்த உண்மையான தாக்குவதாரிகளாக இருந்தார்கள் ) இப்போது இல்லை, இந்த பிரதேச சபை பிரச்சினையை அதன் தேவைக்கு அதிகமாகவும், அசிங்கமாகவும் அன்றாட வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், பிரதேச வாதத்தை எதிர்கால சந்ததிகளின் உள்ளத்திலும் விதைக்கப்பட்டு வருகிறது. வந்தான் வரத்தான், பொறம்போக்குகளெல்லாம் சாய்ந்தமருதூரில் சபையில் குந்தி ஊருக்கு வழிகாட்டிகளாகவும், போராட்டங்களை முன்னெடுப்பவர்களாவும் உருவாகி விட்டார்கள். இதட்கான பலனை இந்த ஊரும் ஏன் இப்பிரதேசத்தின் முஸ்லிம்களும் ( இந்த நாட்டின் முஸ்லிம்கள் என்றே கூறலாம் ஏனெனில் இந்த நாட்டின் முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்கும் பிரதேசமாகும்) அனுபவித்தே ஆகவேண்டும். சாய்ந்தமருது பிரதேச சபை பிரச்சினை மிகவும் தூரநோக்குடனும் இந்த பிரதேசத்தின் அரசியல் பலம், பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் பற்றி சிந்தித்து முடிவெடுக்கப்பட வேண்டிய விடயம். ஊர் வாதமும், பிரதேச வாதமும் தாண்டவமாடுகிறது. இது முழுக்க முழுக்க இந்த ஊரில் உள்ள சில இயக்கங்களும், வங்குரோத்து அரசியல் ஞானம் அற்ற அரசியல் பிரமுகர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம். மிகவும் கல்விசார்ந்த, அறிவு சார்ந்த, professionals உள்ள ஊரான சாய்ந்தமருது; பொறுப்பற்று இயங்கும் புறம்போக்குகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோளாகும்.

    உமர் அலி அவர்களின் செய்திக்கு வருகிறோம்: பாவா பாரூக் ( இவர் கொஞ்சன் சுகவீனமாகவும் உள்ளார்; இவரிடம் ஹக்கீம், ஹிஸ்புல்லா, அதாவுல்லா..... etc., பல் இளித்த காலம் இருந்தது. ஹரீஸ் அட்ரஸும் தெரியாத காலம். தலைவர் அஷ்ரப் அவர்கள் கட்சி விடயங்களுக்காக call எடுத்து உதவி கேட்ட காலம் ) ஜவாத்தின் சொந்தக்காரர், மச்சினன் என்பதை இந்த இடத்தில் சுட்டி காட்ட விரும்புகிறோம்.
    முஸ்லீம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக கருத்துக்கள் சொல்லுவதட்கும் புத்தகம் எழுத்துவதட்கும் யாருக்கும் உரிமை உண்டு, அதிலும் முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளுக்கு அதிகமான உரிமை உண்டு, அதிலும் ஜவாதுக்கு ஹக்கீமை விட அதிக உரிமை உண்டு. . அதில் ஹக்கீமுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர் நீதி மன்றம் செல்லலாம். உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும், முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பாதை ஆரோக்கியமாக பயணிக்க வேண்டும்... அதட்கு வாதங்களும், பிரதிதி வாதங்களும் உறுதுணையாக இருக்கும் என்பது எமது கருத்தாகும். ஹக்கீமுக்கு எதிராகவும், முஸ்லீம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராகவும் ( இரண்டும் வேறு வேறான பாத்திரமாகவே நாங்கள் கருதுகிறோம்) ஒரு புத்தகம் இல்லை ஆயிரம் புத்தகம் எழுதலாம். வஸீர் சேகு தாவூத்திடம் இருந்தது பல புத்தகங்கள் எதிர் பார்க்கலாம்.

    இந்த உமர் அலியின் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

    ReplyDelete
  3. முஸ்லீம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக கருத்துக்கள் சொல்லுவதட்கும் புத்தகம் எழுத்துவதட்கும் யாருக்கும் உரிமை உண்டு, அதிலும் முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளுக்கு அதிகமான உரிமை உண்டு, அதிலும் ஜவாதுக்கு ஹக்கீமை விட அதிக உரிமை உண்டு. . அதில் ஹக்கீமுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர் நீதி மன்றம் செல்லலாம். உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும், முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பாதை ஆரோக்கியமாக பயணிக்க வேண்டும்... அதட்கு வாதங்களும், பிரதிதி வாதங்களும் உறுதுணையாக இருக்கும் என்பது எமது கருத்தாகும். ஹக்கீமுக்கு எதிராகவும், முஸ்லீம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராகவும் ( இரண்டும் வேறு வேறான பாத்திரமாகவே நாங்கள் கருதுகிறோம்) ஒரு புத்தகம் இல்லை ஆயிரம் புத்தகம் எழுதலாம். வஸீர் சேகு தாவூத்திடம் இருந்தது பல புத்தகங்கள் எதிர் பார்க்கலாம்.

    இந்த உமர் அலியின் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.