Header Ads



ஒரு வருடம் பயன்படுத்திய, வாகனங்களுக்கும் வரிச் சலுகை


புதிய மின்வலு மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்ட வரிச் சலுகையை, ஒரு வருடங்கள் வரை பயன்படுத்திய மின்வலு மோட்டார் வாகனங்களுக்கும் வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று வௌியிடுவதாக, அந்த அமைச்சின் நம்பத்தகுந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. 

புதிய மின்வலு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய 10 இலட்சம் ரூபா வரிச் சலுகை வழங்கப்படும் என, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. 

எனினும், வாகன இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய, இந்த யோசனையில் திருதத்தை மேற்கொள்ள நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.