Header Ads



வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு, நாம் சொல்ல முடியாது - ரணில்

“மாகாணங்கள் இரண்டை ஒன்றிணைத்தல் அல்லது மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், இவற்றில் எதையென்றாலும், நாட்டு மக்கள் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே செய்ய முடியும்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

“அதனைவிடுத்து, மாகாணங்களை ஒன்றிணைக்குமாறு பலவந்தமாகச் சென்று, நாடாளுமன்றத்தால் கூற முடியாது” என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படக்கூடாது என்பதுடன், மாகாணங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு இருத்தலும் கூடாது என்று

வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பற்றிக் குறிப்பிட்டுப் பேசும் போதே, ரணில் விக்கிரமசிங்க மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.  

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. அதில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“நாட்டில் தற்போது 9 மாகாணங்கள் இருக்கின்றன. முழு நாட்டினதும் இணக்கமின்றி அதை பத்தாகவோ அல்லது எட்டாகவோ அல்லது பதினைந்தாகவோ ஆக்க முடியாது. நாட்டின் சகல மக்களும் இணங்கினால், எம்மால் அதை பதினைந்தாகவும் சரி அல்லது மூன்றாகவும் சரி எப்படியும் மாற்றியமைக்க முடியும். மக்கள் இணக்கம் தெரிவித்தால் நாம் அதை செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார். 

“எனினும், அதை மக்களால் தான் முடிவு செய்ய முடியும். அதைவிடுத்து அதைச் செய்யுமாறு நாடாளுமன்றம் பலவந்தமாகச் சென்று கூற முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களையோ அல்லது சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களையோ ஒன்றிணைக்குமாறு நாம் சொல்ல முடியாது” என்று பிரதமர் விக்கிரமசிங்க இதன்போது மேலும் குறிப்பிட்டார்.   

4 comments:

  1. வட, கிழக்கு இணைப்பிற்கு தான் எதிர்ப்பு என்று, ரணில் சுற்றி வளைத்து சொல்கிறார்போல.

    இணைப்பு என்ற பருப்பு ஒரு போதும் வேகாது என்பது, எல்லாரும் தெரிந்ததுதான்.

    ReplyDelete
  2. தம்பி அந்தோணி எங்கப்பா நீர்? நல்லா கேட்டுங்கோங்க நாட்டின் பிரதமரே சொல்லிட்டாரு

    ReplyDelete
    Replies
    1. Gt !
      அந்தோனி போன்றவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள் "கிறுக்கன்"என்று.
      இப்ப எங்காவது மழையில நனஞ்சிக்கிட்டு நடுங்கிக்கொண்டு கிடப்பார். நாளைக்கும் வந்து ஏதாவது குறுக்கால ஒளறுவார். ஐயோ ஐயோ!

      Delete
  3. இவர் ஒரு ராஜதந்தி(ந)ரி
    இது இப்போதைக்கான பேச்சு

    ReplyDelete

Powered by Blogger.