November 22, 2017

பள்ளிவாசலுக்கு வந்து, பொலிஸ் பொறுப்பதிகாரி ஆற்றிய முக்கியத்துவமிக்க உரை

கடந்த வெள்ளிக்கிழமை(17/11/17) அன்று பேருவளை மருதானை, மஸ்ஜில் புர்கானில் ஜும்மா தொழுகையின் பின்னர் ஆற்றிய உரையிலிருந்து.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.

களுத்துறை, பயாகலை பகுதிகளில் சேவை செய்தவன் என்ற வகையில்  பேருவளையைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறேன்.

உங்கள் பகுதியில் வளரும் சிறுவர்களையும், இளைஞர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் பற்றிப் பேசவே, உங்கள் ஜும்மா தொழுகை முடிந்ததோடு பள்ளிக்குள் வந்தேன்.

முன்பெல்லாம் போதைப் பொருள்  பாவனையென்றால் வடகளுத்துறையில் மட்டும் தான் இருந்தது. இப்போது  பேருவளையில் மஹகொடையிலும், மருதானையிலுமே கூடுதலாக  விற்பனையாகிறது. மஹகொடையில் பன்னிரண்டு பேரைக் கைது செய்து  விட்டோம். இன்னும் ஒருவர் மீதமிருக்றார். அவர்தான் பிரதான வியாபாரி. ஆனால் அவரது கைக்கு போதைப் பொருள்கள் வந்து சேருவதில்லை. எனவே கைது செய்ய முடியாமல்  இருக்கிறது. வெகுவிரைவில் அவருக்கு  பாடம் படிப்பிப்போம்.

உங்கள் வளரும் சந்ததியைக் காப்பாற்ற  உங்களிடம் உதவி கேட்க வந்திருக் கிறேன். நீங்கள் செய்யும் உதவி என்னவென்றால், போதைப் பொருள்  வியாபாரிகளை காப்பாற்ற முயற்சிக்காதிருப்பதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு  வழங்காதிருப்பதுமே. சட்டத்தை  ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு  மனிதனைத் திருத்திக் கொள்ளலாம்  என்ற நம்பிக்கையில் முயற்சிக்கிறோம். மீறுவோறுக்கு சரியான சட்ட நடவடிக்கை எடுக்க தவறமாட்டேன்.

முஸ்லிம் பிரதேசங்களில் தலைக் கவசம்( helmet) அணியாமல் பயணிக்கிறார்கள் என்றும் நாம் அதைப் பிடிப்பதில்லையென்றும், முகநூலில் எம்மை மிகமோசமாகத் தாக்கி எங்கள் (சிங்கள) மக்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுச் சட்டத்தை மதியுங்கள். மலசல கூட கழிவுகளை வீதிக்கு விடாதீர்கள். இந்த வீதிகளில் நீங்கள் தான்  பயணிக்கிறீர்கள். நாங்கள் அல்ல. பாடசாலை செல்லும் வயதினருக்கு தொழில் வழங்காதீர்கள். படிக்க வசதியில்லையென்றால் என்னிடம் சொல்லுங்கள். அதற்கு உதவி செய்யக் கூடியவர்களை அனுகி நான்  உதவி பெற்றுத் தருகிறேன். மீறுகிற போது நான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். அப்போது இவற்றை  சாதாரண விடயமாக நினைத்துக் கொண்டு என்னை சந்திக்க வராதீர்கள்.

 Nabhan Shihabdeen

8 கருத்துரைகள்:

போலீஸாருடனான சமூக உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.  அவ்வப்போது வசதியான திருமண வைபவங்களின்போது நாலைந்து மரவை உணவுகளை அவர்களுக்கு அன்பளிப்பதன் மூலம் அவர்களது உள்ளங்களை வெல்லலாம்.

'அன்பளிப்புகள் உள்ளத்திலுள்ள கசடுகளை நீக்கி விடுகிறது' என்பது ஓர் நபிமொழி.

We shouldn't ignore the advices given by the police officer. The advices of the police officer giving us the standings of the Muslim community in Sri Lanka. He indirectly mentioned about our involvement in drugs trafficking and drug business , disobedience in breaching of traffic rules, employment of child labour, and polluting the public utilities. It is bitter to accept but it is the reality.

Islam has taught us about all the above and we are expected to be modelled for others. Instead of this a non Muslim coming and teaching us of the teachings of Islam.

We as responsible members of our community should give good hearihearing to the above in order to put our community into the correct path of Islam.

S.M Sideeque//& All.
Take this news has Positive, And think positively before talking about Islam, Islam. Open your Eyes.. Our Community going toward danger... Can't you SEE...

@Gtx, எவ்வளவு கிறேட் அட்வைஸ் சொன்னால் என்ன, உங்கள் மர மண்டையில் ஏற மாட்டெங்குதே.

@ Ajay Antonyraj, I think you should not poke your nose into our affairs. So please mind your own business. One should not expect a 100% change from any community this will never happen.

டேய் அந்தோனி நீ கடுமையாக துள்ளுகிறாய். வெகுவிரைவிலேயே அள்ளாஹ்வின் இறுக்கமான கிறுக்குப் பிடிக்குள் மாட்டிக்கொள்ளப்போகின்றாய். மீளவும் முடியாமல் அவஸ்தைப்படுவீர்.

Ajan நீ ஒரு இனத்துவேசி என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.நீ எங்களின் மணடையில் ஏறவில்லை என நினைத்து இப்படி அடிக்கடி நிறுபிக்க தேவையில்லை.

Post a Comment