Header Ads



ஜனாதிபதிக்கு கவிதை எழுதிவைத்துவிட்டு, உலகை விட்டுச்சென்ற யுவதி


ஜனாதிபதி தந்தைக்கு கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு இந்த உலகை விட்டுச் சென்ற யுவதி ஒருவர் தொடர்பான செய்தி அண்மையில் வெளியாகி இருந்தது.

அனுதி ரன்முத்து என்ற இந்த யுவதி ஒரு வங்கி ஊழியர். இணையத்தளங்களில் சிங்கள கவிதைகளை எழுதி வெளியிட்ட பிரபலமான கவிஞர்.

பல தலைப்புகளில் கவிதைகளை எழுதி அனுதி ரன்முத்து கடந்த வருடம் லிஹினி பியாத் ( வழுக்கும் சிறகுகள்) என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார்.

நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த அவர், நீண்டநாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உயிரிழக்கும் முன்னர் அனுதி ரன்முத்து தனது முகநூலில் அருமையான பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

“ ஜனாதிபதி தந்தைக்கு, முடிந்தால் தேசிய வைத்தியசாலையின் தாழ்வாரத்தில் உடைந்துள்ள இடங்களில் சீமெந்து பூசுமாறு எவரிடமாவது கூறுங்கள்.... சக்கர நாற்காலிகளில் நாங்கள் செல்லும் போது குழிகளில் விழுந்து நாங்கள் விண்நோக்கி செல்கிறோம் நாங்கள் பாவங்கள்.” என பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகளை கவிதையால் குறிப்பிட்ட அவர் தற்போது எம் மத்தியில் இல்லை. எனினும் அவர் சுட்டிக்காட்டிய குறைகள் மாத்திரம் எம்முடன் இருக்கின்றன.

No comments

Powered by Blogger.