Header Ads



தங்க நிறத்தில் ஜொலித்த மஹிந்தவை, குருணாகலில் இருந்து சைக்கிளில் வருமாறு சவால்

கூட்டு எதிர்க்கட்சியின் சைக்கிள் சவாரி கேளிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது என இடதுசாரி கேந்திர நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -10- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இவர்கள் சைக்கிள் ஓட்டி வந்தது எதற்காக? மக்களுக்காகவா? அவர்கள் வந்த விதத்தைப் பார்க்கும் போது எமக்கு பல கேள்விகள் எழுகின்றன.

அவர்கள் சைக்கிள் ஓட்டும் போது, ஒரு துளி வியர்வை கூட வரவில்லை, அவர்களுடைய அலங்காரம் அப்படியே இருந்தது, கண்ணாடியுடன், தங்க நிறத்தில் மஹிந்த ஜொலித்தார்.

இவர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் இருந்து உள்ளே வரும் வரை மட்டுமே சைக்கிளில் வந்தார்.

மக்கள் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்காக சைக்கிள் ஓட்டுவதாயின் மஹிந்த குருணாகலில் இருந்தும், நாமல் ராஜபக்ஸ அம்பாந்தோட்டையில் இருந்தும் சைக்கிளில் வந்திருக்க வேண்டும்.

அதை விடுத்து ஒரு விளையாட்டுக்காகவே சைக்கிளில் வந்துள்ளார்கள். நாட்டு மக்களுக்கு பிரச்சினை உள்ளது, தமக்கு பிரச்சினை உள்ளது என்றால் தினமும் சைக்கிளில் வரலாமே என சுட்டிக்காட்டினார்.

மேலும் சிலர் மாட்டுவண்டியில் வருகின்றார்கள், மாட்டு வண்டியில் வந்து உயிரினங்களை வதைப்பதை விட கூட்டு எதிர்க்கட்சியில் இருப்போரை வைத்து வண்டியை இழுக்க வேண்டும் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.